தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 27 ஜூன், 2014

உடல் சூட்டை தணிக்கும் கொய்யாப்பழம் !

பழங்களில் இனிப்பு சுவை கொண்ட கொய்யா பல்வேறு சத்துக்களை கொண்டுள்ளது.
ஆப்பிளைப் போலவே, கொய்யாப்பழத்திலும் அதிக சத்துக்கள் தோலில் மட்டுமே காணப்படுகின்றன. கொய்யாப்பழத்தில் கொ ஞ்சம் கொழுப்பு, புரோட்டீன் ஆகியவை உள்ளன.
நாள்தோறும் ஒரு கொய்யாப் பழம் வீதம் தொடர்ந்து ஆறுமாதங்கள் சாப்பிட்டு வந்தால் உங்களுக்குப் புற்றுநோய் வரவே வராது. நெல்லிக்கு அடுத்து கொய்யாவில் அதிக அளவு விட்டமின் சி உள்ளது.
கொய்யா தற்சமயம் எல்லா காலங்களிலும் கிடைக்கிறது. வெள்ளைக் கொய்யா, சிவப்புக் கொய்யா என இருவகை உள்ளது.
குறைந்த விலையில் அதிகச் சத்துக்கள் பெற கொய்யாச் சாறு தினமும் அருந்தலாம். இனிப்பும், அமிலச் சத்துகளும் கலந்த ருசியான பழம். குளிர்ச்சி மிகுந்தது. கொய்யாவில் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.
சளி தொந்தரவு நீங்க
சிலர் கொய்யா சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று நினைக்கிறார்கள். இது தவறு. உண்மையில் கொய்யாப்பழம் சளி தொந்தரவை விரட்டும் மருந்து.
அதனால் கொய்யா பழத்தை சாப்பிட விரும்பாத குழந்தைகளுக்கு கொட்டைகள் நீக்கிய கொய்யாப் பழத்தை அரைத்து, அதனுடன் வெல்லம், சர்க்கரை சேர்த்து தோசையாக வார்த்து கொடுக்கலாம்.
மலச்சிக்கல் நீங்க
மலச்சிக்கல் இருப்பவர்கள் தினமும் ஒரு கொய்யாப் பழத்தை ஒரு டீஸ்பூன் தேனுடன் கலந்து ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடனடி தீர்வு கிடைக்கும்.
ரத்த சோகைக்கு மருந்து
ரத்த சோகை இருப்பவர்களும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களும் தினமும் ஒரு கொய்யாப் பழத்தை சாப்பிட்டு சூடான தண்ணீர் குடிக்க வேண்டும்.
இப்படி 48 நாட்களுக்கு தொடர்ந்து செய்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, உடலில் சக்தி ஏறும்.
உடல் சூடு நீங்க
சிலருக்கு உடல் சூடு அதிகமாக இருக்கும். இவர்கள் தினமும் ஒரு கொய்யாப் பழத்தை சாலட் போல் செய்து சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியடையும்.
வாய்ப்புண் குணமடைய
கொய்யா மரத்தின் வேர் மற்றும் பட்டையை சுத்தம் செய்து நசுக்கி, வெந்நீரில் கொதிக்க வைத்துக் குடித்தால் வாய்ப்புண் குணமடைவதுடன், அது மீண்டும் வராமலும் தடுக்கலாம்.
பல் பிரச்சனை நீங்க
மா இலையுடன் கொய்யா இலையை காய வைத்து அரைத்து, பல்பொடியாகப் பயன்படுத்தினால், பல்லில் ரத்தம் வடிதல், ஈறு வீக்கம் போன்றவை குணமாகும்.
இரத்த குழாய் அடைப்பு நீங்க
இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்த ஓட்டம் போன்றவற்றை கொய்யாப் பழம் சீர்படுத்துகிறது. (இரத்தக் குழாயில் 80% சதவிகிதம் , 70% சதவிகிதம் அடைப்பு இருந்தால் அவைகளைப் போக்கிவிடும் என்று கூறமுடியாது. 5 லிருந்து 10% வரை அடைப்புகளைப் போக்கலாம்.
கொழுப்பு நீங்க
இளம் கொய்யா இலையில் தயாரிக்கப்படும் தேநீரை பருகுவதால் கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடின் அளவுகளில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
அதனால் அடுத்த எட்டு வாரங்களுக்கு பிறகு கொழுப்பு அளவுகளில் பல மாற்றங்கள் ஏற்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக