பெர்முடா முக்கோணம்(Bermuda Triangle)
பெர்முடா முக்கோணம் என்பது, வடஅட்லாண்டிக் மேற்பகுதியில் உள்ள ஒரு பகுதியாகும்.
அங்கே நிறைய வானூர்திகளும், கப்பல்களும் மர்மமான சூழ்நிலைகளில் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த மறைதல்களுக்கு மனித ஆற்றலுக்கு அல்லது உலகத்திற்கு அப்பாற்பட்ட உயிர்களின் செயல்திறன் காரணமாக இருக்கலாம் என்று பொதுமக்கள் நம்புகின்றனர்.
மேலும், இன்றுவரை இந்த முக்கோணத்தின் மர்மம் யாராலும் கண்டுபிடிக்கப்படாமலே இருக்கிறது.
நகரும் கற்கள்(Sailing Stones)
நகரும் கற்கள் என அழைக்கப்படுவது கற்கள் மனிதனாலோ அல்லது எந்தவொரு விலங்கினத்தின் தலையீடோ இன்றி ஒரு நீண்ட நேரான பாதைக்குத் தடத்துடன் நகரும் ஒரு நிலவியல் தோற்றப்பாடு ஆகும்.
இத்தகைய சம்பவங்கள் ரேஸ்ட்ராக் பிளாயா, சாவுப் பள்ளத்தாக்கு போன்ற இடங்களில் பதிவு செய்யப்பட்டு ஆராயப்பட்டு வருகின்றன.
இத்தகைய இடங்களில் கற்கள் நகர்ந்ததற்குரிய சுவடுகளும் நகர்ந்த கற்களும் நிழற்படமாகப் பிடிக்கப்பட்டுள்ளன.
ஆனால், கற்களை நகர்த்தும் விசை எதுவென்பது இதுவரை அறியப்படாத ஒன்றாகவே உள்ளது, எனினும் இதனைப் பற்றிய ஊகங்களும் கோட்பாடுகளும் உலாவிய வண்ணமே உள்ளன.
ஸ்டோன்ஹெஞ்ச்(Stonehenge)
ஸ்டோன்ஹெஞ்ச் என்பது இங்கிலாந்தில் அமைந்துள்ள புதிய கற்கால மற்றும் வெண்கலக் காலத்தைச் சேர்ந்த நினைவுச் சின்னமாகும்.
இது, பெருங்கற்கள்(megalith) என அழைக்கப்படும், வட்டவடிவில் நிலைக்குத்தாக நிறுத்தப்பட்டுள்ள பெரிய கற்களையும் அவற்றைச் சுற்றியமைந்துள்ள மண்அமைப்புக்களையும் உள்ளடக்கும்.
இதன் காலம் பற்றி இன்னும் விவாதங்கள் இருப்பினும், பெரும்பாலான தொல்லியல் ஆய்வாளர்கள் இவ்வமைப்பு கி.மு 2500க்கும், கி.மு 2000க்கும் இடைப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என எண்ணுகிறார்கள்.
ஸ்டோன்ஹெஞ்ச் பல கட்டங்களாக உருவானது என்றும், அதன் கட்டுமானம் குறைந்தது 1,500 ஆண்டுகள் நீடித்திருந்ததாகவும் கருதப்படுகிறது. அதை சுற்றி பெரிய அளவிலான கட்டுமானம் நடைபெற்றதற்கான சான்றுகள் உள்ளன.
மேலும், இது ஒருவேளை 6,500 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
ஈஸ்டர் தீவு(Easter Island)
ஈஸ்டர் தீவு என்பது பசிபிக் பெருங்கடலின் தென்கிழக்கே அமைந்துள்ளது.
மக்களினால் அமைக்கப்பட்ட மோவாய்(moai) என அழைக்கப்படும் பல நினைவுச் சின்னங்கள் இத்தீவின் சிறப்பு.
மனித முகம் போல் தோற்றமுடைய மோவாய்கள் என்ற பிரமாண்டமான நூற்றுக்கணக்கான கற்சிலைகள் தீவெங்கும் காணப்படுகின்றன.
இவற்றின் உயரம் சராசரியாக 10 மீட்டரும் எடை 80 டன்னும் உள்ளன.
முன்னூறுக்கும் மேற்பட்ட இவற்றை ஓரிடத்தில் நிலைத்து இருத்தாது பத்து மைல் தூரம் வரை தீவு முழுமையும் நகர்த்தப்பட்டு வந்துள்ளன.
இவற்றைக் குறித்த ஆய்வுகள் தொல்பொருள் ஆய்வாளர்களுக்கு சவாலாக அமைந்துள்ளன.
மேலும், உலகில் கண்டுபிடிக்க முடியாத மர்மங்களில் ஈஸ்டர் தீவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
நசுகா கோடுகள்(Nazca Lines)
நசுகா கோடுகள் என்பவை தென்னமெரிக்காவில் இருக்கும் பெரு நாட்டில் உள்ள நசுகா என்னுமிடத்தில் அமைந்துள்ள கோடுகள் ஆகும்.
மனிதர்கள் வாழாத இடமான மிகப்பெரிய நிலப்பரப்பில், பெருவெளிகளில் நேராகவும், நேர்த்தியாகவும் சித்திரங்களாக இந்த கோடுகள் வரையப்பட்டிருக்கின்றன.
இந்த நசுகா கோடுகள், சுமார் 500 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்திருக்கின்றன.
இவை ஆறாம் நூற்றாண்டில் அப்பகுதியில் வசித்த நசுகா நாகரிகத்தவரின் செயல் என்று நம்பப்படுகிறது.
இந்தச் சித்திரங்களின் முழுமை எவருக்குமே தெரியாது.
இவற்றைப் பார்க்க வேண்டும் என்றால் வானத்தில் உயரப் பறந்தால் மட்டுமே முடியும்.
ஆனால், 1500 ஆண்டுகளுக்கு முன்பு இது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை.
|
தொலைக்காட்சி!!
இந்த வலைப்பதிவில் தேடு
வெள்ளி, 6 ஜூன், 2014
ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் மர்மங்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக