தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 19 ஜூன், 2014

ஆண்களே..இனி நீங்களும் அழகுடன் ஜொலிக்கலாம்!

அழகு என்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் தான்.
பெண்கள் விழுந்து விழுந்து அழகுபடுத்துவார்கள், ஆனால் அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் உங்கள் அழகிலும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.
முதலில் உங்கள் முக அழகு தான் முக்கியம், சில ஆண்களுக்கு டீன் ஏஜில் ஏற்படும் மிகப்பெரிய பிரச்னை முகப்பரு சில நாட்கள் இருந்தாலும் அதன் வடு மாறாது.
இதற்க்கு சரியான தீர்வு சாதிக்காய், சந்தனம், மிளகு இவை மூன்றையும் சேர்த்தரைத்த விழுதை பருக்களின் மீது தடவிவரவும்.
பாசிபயிறு மாவு, கடலைமாவு சிறிது தயிர் சேர்த்து குளிக்கும் போது அல்லது முகம் அலசும் போதும் இந்த பேஸ்டை பயன்படுத்தவும்
முகம் வரட்சியினை போக்க:
கொத்துமல்லி மற்றும் புதினா இவற்றை சேர்த்து கெட்டியாக அரைத்து, முகத்தில் வாரம் ஒருமுறை பூசி வரலாம்.
ஆலிவ் எண்ணெயுடன் எலுமிச்சைச்சாறு கலந்து, முகத்தில் தடவி வந்தாலும் முக வரட்சி மாறும்.
வெயிலில் செல்லும்போது, சன் ஸ்கிரீன் அடங்கிய ஃபேர்னெஸ் க்ரீம் பயன்படுத்தலாம். இதைக் கை கால்களுக்கும் அப்ளை செய்து கொள்ள வேண்டும்.
உதட்டுக்கு வேசலீன் அடங்கிய லிப் ஜெல்களைப் பயன்படுத்தவும்.
கை மற்றும் கால்களில் நகங்களை ஒட்ட வெட்டி நீட்டாக வைத்திருப்பதே ஆண்களுக்கு அழகு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக