தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 18 ஜூன், 2014

தயவு செய்து ..வெயிலே ஓடிப்போ!!


கோடை காலம் என்றவுடனே சட்டென்று நினைவுக்கு வருவது சூரியனின் வெப்பம் தான்.
அதிலும் மிகவும் முக்கியமானது அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயிலின் தாக்கம்.
பொதுவாக கிராமப் புறங்களை விட நகர் புறங்களில் வசிக்கும் மக்கள் இதனால் அதிகளவு பாதிப்படைகிறார்கள்.
கோடை வெயிலின் உக்கிரத்தை தணிக்க சிலர் மலை பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்கின்றனர்.
பலர் பூங்கா, கடற்கரை என நிழல்தரும் இடங்களுக்கு சென்று வெயிலின் தாக்கத்தை தணித்துக் கொள்கின்றனர்.
கோடைக் காலத்தில் உண்டாகும் அதிக உஷ்ணத்தால் மனிதர்களுக்கு பலவகையான பாதிப்புகளும் ஏற்படுகின்றது.
கோடை வெயிலின் தாக்கம் குறைய
· கோடை காலத்தில் அதிகம் நீர் அருந்துவது நல்லது. அதிக நீரை குடிக்கும் போது உடலில் ஏற்படும் உஷ்ணம் தணியும் .
· நீரை கொதிக்கவைத்து அருந்துவது சாலச் சிறந்தது. குளிர்சாதன பெட்டியில் வைத்து நீரை அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
· மண் பானை நீர் மிகவும் நல்லது . தண்ணீரை கொதிக்க வைக்கும்போது அதனுடன் சிறிது சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஆறிய பின் நீரைப் பருகலாம்.
· முடிந்தவரை ஐஸ்கட்டி கலந்த பானங்களை தவிர்ப்பது நல்லது. பழங்களை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
· தர்பூசணி, இளநீர், நீர் பெருக்கிய மோர் அருந்துவது மிகவும் நல்லது . பனை நுங்கு சிறந்தது.
· வெள்ளரிக்காய் சாலட் சாப்பிடலாம்.
· வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக