தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 19 ஜூன், 2014

கடலுக்கு அடியில் ஓர் அதிசயம்


பவளப் பாறைகள்
பவளப் பாறைகள்(Coral Reefs) என்பவை கடலினுள் பவளம் எனப்படும் ஒரு உயிரினத்தால் சுரக்கப்படும் கால்சியம் கார்பனேட்டினால் உருவாகின்றன.
பெரும்பாலும் இவை பூமத்தியரேகைக்கு கீழே உள்ள நாட்டின் கடல் பகுதிகளிளும், பசிபிக்பெருங்கடலிலும் காணப்படும்.
இந்தியாவில் அந்தமான் தீவுகளிலும், லட்சத் தீவுகளை ஓட்டிய கடல் பகுதிகளிலும் இவை காணக்கிடக்கின்றன.
பவளப்பாறைகளில் கண்டத்திட்டுப் பவளப்பாறைகள், தடுப்புப் பவளப்பாறைகள், வட்டப் பவளத்திட்டுகள் என மூன்று வகைகள் உள்ளன.
பசிபிக் பெருங்கடலில் பல அழகான வண்ணங்களில் பவளப்பாறைகள் அமைந்துள்ளன.
இவை பச்சை, கருஞ்சிவப்பு, பழுப்பு, மஞ்சள் முதலான நிறங்களில் காணப்படுகின்றன.
மேலும் இவை பல்வேறு கடல் உயிரினங்கள் வாழ்வதற்கான இடமாகவும் இருக்கின்றன.
பவளப்பாறைகள் உருவாகத் தேவையான சூழ்நிலை
உலகின் அனைத்து சமுத்திரங்களிலும் பவளப்பாறைகள் உருவாவதில்லை.
இவை உருவாவதற்கு விசேட சுற்றுச்சூழல் அவசியம் ஆகும்.
சமுத்திர நீரின் வெப்பநிலை 20°C - 24°C இதற்கு இடைப்பட்டதாக இருக்க வேண்டும்.
சமுத்திர நீரின் ஈரப்பதம் 30 சத வீதத்தில் இருந்து 35 சத வீதம் வரை இருக்க வேண்டும்.
சூரிய ஒளி சமுத்திரத்தின் ஆழ்பகுதி வரை நன்கு ஊடுருவ வேண்டும்.
கடல் அலை குறைவாக இருக்க வேண்டும்.
பவளப்பாறை உருவாக்கம்
பவளம் எனும் சிறிய அங்கிகளே பவளப்பாறைகளை உருவாக்குகின்றன. முள்ளந்தண்டு அற்ற இந்த உயிரினத்தை பொலிப்(polyp) என்று அழைப்பர். இந்தப் பொலிப் உயிரினங்கள் மென்மையான மற்றும் ஒளி ஊடுருவும் தன்மையுடைய ஒரு உயிரினமாகும்.
இவ்வாறான ஆயிரக்கணக்கான பொலிப் உயிரினங்கள் ஒன்று சேர்வதாலேயே பவளப்பாறைகள் உருவாகின்றன.
இவை கடல் நீரிலிருந்து பெற்றுக்கொள்ளும் கால்சியம் ஆனது கால்சியம் கார்பனேட் ஆக மாறுவதால் அவை கற்பாறைகள் மீது ஒட்டிக் கொள்வதால் பவளப் பாறைகளாக மாறுகின்றன.
பெரும் தடுப்புப் பவளத்திட்டு(The Great Barrier Reef)
பெரும் தடுப்புப் பவளத்திட்டு 2,900 தனித் திட்டுக்களையும், 2,600 கிமீ தூரம் நீண்டிருக்கும் 900 தீவுகளையும் கொண்டு ஏறத்தாள 344,400 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்துள்ளது.
இது வடகிழக்கு அவுஸ்திரேலியாவின், குயின்ஸ்லாந்து கரைக்கு அப்பால் பவளக் கடலில்(Coral Sea) அமைந்துள்ளது.
பெரும் தடுப்புப் பவளத்திட்டு, உயிரினங்களால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய ஒற்றை அமைப்பாகும்.
இதனை விண்வெளியில் இருந்தும் பார்க்க முடியும். இந்தப் பவளத்திட்டு அமைப்பு பல கோடிக்கணக்கான நுண்ணிய உயிரினங்களால் அமைக்கப்பட்டவை.
இதில், கிட்டதட்ட 3000க்கும் மேலான முற்றிலும் குணாதிசயத்திலும் மாறுபட்ட திட்டுகள் இடம் பெற்றுள்ளன.
இந்த பவளப் பாறையை உருவாக்கிய முக்கிய விலங்குகளான பொலிப், பார்ப்பதற்கு அழகான செடிகளைப் போன்று தான் காட்சியளிக்கும்.
பொலிப் பார்ப்பதற்கு ஜெல்லி மீனை தலை கீழாக வைத்ததை போன்ற தோற்றத்தில் இருக்கும். இவைகள் ஒன்றாக சேர்ந்து காலனிகளாக வாழும் குணமுடையவை.
இவை தொடுதல், வெப்ப நிலை, நீரோட்டம் மற்றும் சூரிய, சந்திர சுழற்சிகளுக்கு உணர்வளிக்கும் விதமாக நடந்து கொள்ளும்.
ஒவ்வொரு பொலிப்சின் டென்டிகல்ஸ்(tenticles) பல லட்ச கணக்கான சிறிய பழுப்பு நிற புள்ளிகளை கொண்டிருக்கும்.
அதிலிருக்கும், ஒவ்வொரு புள்ளியும் ஒரு நுண்ணிய செடியாகும். அது, சூரிய ஒளியை பவளத்திற்கு தேவையான உணவாகவும், சத்தாகவும் மாற்றி தரும் இயல்புடையது.
மேலும், அவை பவளத்திற்கு தேவையான சுண்ணாம்பு கற்களை தண்ணீரிலிருக்கும் கனிமங்களை பயன்படுத்தி மாற்றித் தருகின்றன. இந்த முறையில் தான் பவளப் பாறைகள் பல ஆண்டுகள் தொடர்ந்து பெரிதாக வளர்கின்றன.
இது மட்டுமல்லாமல், ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரினங்களுக்கு வாழ்விடமாக விளங்குகிறது.
Sting ray, eels, silver fish, pump head parrot fishes, grouper fishes,epacullete fish, cucumber etc போன்ற பல நீர் உயிரினங்கள் இதில் வாழ்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக