தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 20 ஜூன், 2014

உலகக்கிண்ண கால்பந்து வரலாற்றை கலக்கியவர்கள்


உலகக்கிண்ண கால்பந்து போட்டிகள் பிரேசிலில் அதிரடியாய் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் உலகக்கிண்ண கால்பந்து வரலாற்றை புரட்டிப் போட்ட வீரர்களை பற்றியும் நம்மால் மறக்க முடியாமல் தான் இருக்கும். அந்த வகையில் இடம் பெறும் வீரர்களை பற்றி பார்ப்போம்.
யூசெபியோ
1966ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக்கிண்ண போட்டியின் போது வடகொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் போர்ச்சுகல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் பின்தங்கியிருந்தது.
அப்போது விஸ்வரூபம் எடுத்த யூசெபியோ 30 நிமிடங்களில் 4 கோல்களை அடித்து சாதனை படைத்தார்.
அந்த உலகக்கிண்ணத்தில் போர்ச்சுகல் அதிக கோல்கள் அடித்த அணி என்ற பெயரையும் பெற வைத்தார்.
மேலும் அதிக கோல்கள் அடித்தவருக்கான தங்க காலணி விருதை 1968, 1973 உலக கிண்ணங்களில் அவர் வென்றுள்ளார்.

ரொனால்டோ
பிரேசிலின் ரொனால்டோ சிறப்பாக விளையாடி உலகக்கிண்ணத்தில் அதிக அளவில் கோல்களை அடித்தவர். இவர் உலகக்கிண்ணத்தில் பிரேசில் அணிக்காக 15 கோல்களை அடித்துள்ளார்.
1994ம் ஆண்டு உலகக்கிண்ணத்தில் வென்ற பிரேசில் அணியில் இடம் பெற்றிருந்த இளைஞரான அவர், 1998, 2002ம் ஆண்டுகளில்பிரேசில் அணி உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்கு அணி முன்னேற பெரிதும் உதவினார்.
2002ல் யோகஹாமாவில் நடந்த உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் அவர் 2 முறை கோல் அடித்து பிரேசில் ஐந்தாவது முறையாக உலகக்கிண்ணத்தை வெல்ல உதவினார்.

லெவ் யாசின்
ஆண்டின் சிறந்த ஐரோப்பிய கால்பந்து வீரர் என்ற விருதை பெற்ற ஒரே கோல் கீப்பர் இவர். பாய்ந்து சென்று பந்தை கோலுக்குள் செல்ல விடாமல் தடுத்ததன் மூலம் கோல் கீப்பிங் பணிக்கு புது வடிவம் கொடுத்தவர்.
1958ல் பிரேசில் அணிக்கு எதிரான போட்டியில், பல கோல்களை தடுத்ததன் மூலம் அவர் சர்வதேச அளவில் புகழ் பெற்றார்.
1966ல் அவரது தலைமையிலான சோவியத் யூனியன் அணி நான்காவது இடம் பிடித்தது.

பீலே
பிரேசில் அணியுடன் இணைந்து மூன்று உலகக்கிண்ணங்கள் வென்றவர் பீலே. கால் பந்து என்றாலே நினைவில் வரும் வீரரான இவர் தனது இளம் வயதில் 1958ம் ஆண்டு பிரேசில் உலகக்கிண்ணம் வென்ற போது உதவிகரமாக இருந்தார்.
நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் பிரேசில் அணி மீண்டும் உலகக்கிண்ணம் வென்ற போது அவர் அணியில் இருந்தார்.
கால்பந்து விளையாட்டு உச்சத்தில் இருந்த போது, 1970ம் ஆண்டு பிரேசில் அணி அவரது தலைமையில் உலகக்கிண்ணத்தை வென்றது.

ஜோகன் கிரையூப்
உலக கிண்ணத்தை இவர் வென்றதில்லை, அதிக கோல் அடித்ததில்லை.
ஆனாலும், உலக கிண்ணப் போட்டிகளில் விளையாடிய தலைசிறந்த வீரர்களில் நெதர்லாந்தின் கிரையூப் இடம் பெற்றுள்ளதற்கு காரணம்
அவரது வேகம், பந்தை கடத்திச் செல்லும் விதம், தனது அணி வீரர்கள் கோல் அடிப்பதற்கு வசதியாக பந்தை அவர்களுக்கு அனுப்பும் திறன் போன்றவைதான்.
மேலும் 1974ல் மேற்கு ஜேர்மனியில் நடந்த உலகக்கிண்ணப் போட்டியின் போது, கிரையூப் தலைமையிலான நெதர்லாந்து அணியினர், சிறந்த அணிகளான உருகுவே, அர்ஜென்டினா, பிரேசில் ஆகியவற்றை வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக