உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சாரநாத் புத்தர் மடத்தில் உள்ள, 83 வருடங்கள் பழமையான அரச மரத்தின் ஒரு பகுதி நேற்று அதிகாலை முறிந்து விழுந்தது. கடந்த 2,600 ஆண்டு களுக்கு முன், புத்த கயாவில் அமைந்துள்ள, போதி மரத்தின் அடியில் புத்தருக்கு ஞானம் பிறந்தது. பின் இந்த மரத்தின் ஒரு கிளை இலங்கையில் உள்ள புத்த மடத்தில், நடப்பட்டு வளர்க்கப்பட்டது. பின்னர் இலங்கையில் இருந்து இந்த மரத்தின் ஒரு கிளையைப் புத்த துறவியான அனாகாரிக தர்மபால, 1931ஆம் ஆண்டு சாரநாத்தில் உள்ள 'மூல்கந்த குடி விஹார்' புத்த மடத்தில் நட்டார் என்று வரலாறு கூறுகின்றது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து சாரநாத் வரும் புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள், இந்த புனித மரத்தை வலம் வருவதை, தங்களது தர்மமாகக் கொண்டு உள்ளனர். நேற்று அதிகாலை மரக் கிளை முறிந்ததில் மடத்தின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி மற்றும் ஆறு தர்ம சக்கரங்கள் உடைந்துள்ளன. |
23 Jun 2014 |
தொலைக்காட்சி!!
இந்த வலைப்பதிவில் தேடு
திங்கள், 23 ஜூன், 2014
சாரநாத் புத்தர் மடத்தின் அரச மரம் முறிந்துவீழ்ந்தது (படம் இணைப்பு)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக