தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 24 ஜூன், 2014

பிறந்தநாள் வாழ்த்துக்கள் மெஸ்ஸி!!


கால்பந்தாட்டத்தின் நட்சத்திர நாயகன் மெஸ்ஸி
அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி இந்த தலைமுறையின் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
21 வயதிற்குள்ளாகவே பல விருதுகளுக்கான, பால்லோன் டி'ஆர் மற்றும் உலகிலேயே ஆண்டின் சிறந்த வீரருக்கான ஃபிஃபா (FIFA) விருது ஆகியவற்றுக்கான பரிந்துரைகளைப் பெற்றுள்ளார்.

பிறப்பு
லியோனல் ஆண்ட்ரே மெஸ்ஸி யூன் 24, 1987 இல் பிறந்தவர். இவர் அர்ஜென்டினா கால்பந்தாட்ட வீரர். இவர் தற்போது லா லிகா அணி, பார்சிலோனா மற்றும் அர்ஜென்டினா தேசிய அணி ஆகியவற்றுக்காக விளையாடி வருகிறார்.
இவருடைய ஆட்ட முறை மற்றும் திறமையின் காரணமாக இவர், கால்பந்தாட்ட சாதனையாளரான டீகோ மாரடோனாவுடன் ஒப்பிடப்படுகிறார், மாரடோனாவும் இவரை தன்னுடைய "வாரிசு" என்றே அறிவித்துள்ளார்.

கிளப் வாழ்க்கை
மெஸ்ஸி அவருடைய முதல் அணிக்காக, அதிகாரப்பூர்வமற்ற நட்புரீதியான போட்டி ஒன்றில் நவம்பர் 16, 2003 இல் போர்ட்டோ அணிக்கு எதிராக களமிறங்கினார். ஒரு ஆண்டுக்கு முன்பாகவே, ஃப்ராங்க் ரிஜ்கார்டு என்பவர் இவரை, அக்டோபர் 16, 2004 இல் எஸ்பேன்யோல் அணிக்கு எதிராக லீக் போட்டியில் களமிறக்கினார்.
இதன் மூலமாக பார்சிலோனாவுக்காக விளையாடிய மூன்றாவது மிக இளவயது வீரர் ஆவார் மற்றும் லா லிகா கிளப்பிற்காக விளையாடிய மிக இளவயது வீரரும் இவராவார்.

சர்வதேச விளையாட்டு வாழ்க்கை
யூன் 2004 இல், அர்ஜென்டினா அணிக்காக முதன்முதலில் களமிறங்கினார், அதில் பராகுவேவுக்கு எதிராக 20 வயதுக்குட்பட்டோர் நட்புரீதியான போட்டியில் விளையாடினார்.
2005இல் அவர், நெதர்லாந்தில் 2005 ஃபிபா உலக இளைஞர் சாம்பியன்ஷிப் வென்ற அணியில் இருந்தார். அதில் அவர், தங்கப் பந்து மற்றும் தங்க காலணி ஆகிய விருதுகளைப் பெற்றார்.
18 வயது ஆனபோது, ஆகஸ்ட் 17, 2005 இல் ஹங்கேரி அணிக்கு எதிராக முழுமையாக சர்வதேச போட்டிகளில் விளையாடத் தொடங்கினார்.
மார்ச் 28, 2009 இல் வெனிசுலாவுக்கு எதிரான ஒரு உலகக்கிண்ண காலிறுதி போட்டியில், முதல்முறையாக 10 என்ற எண் கொண்ட அர்ஜென்டினா ஜெர்சியை மெஸ்ஸி அணிந்தார்.
இந்த போட்டியிலேயே முதல் முதலாக டீகோ மாரடோனா அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளராக அதிகாரப்பூர்வமாக பங்கேற்றார். முதல் கோலை லியோனல் மெஸ்ஸி அடித்தார், போட்டியை 4–0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வென்றது.
2008 ஒலிம்பிக்ஸில், அர்ஜென்டினாவுக்காக விளையாடுவதிலிருந்து மெஸ்ஸி தடை செய்யப்பட்டார். ஜோசப் குவார்டியோலாவுடன் பேச்சு நடத்திய பின்னர் பார்சிலோனா அவர் விளையாட அனுமதி அளித்தது.
ஐவரி கோஸ்டிற்கு எதிரான போட்டியில் அர்ஜென்டினா அணியில் சேர்ந்து, 2–1 என்ற வெற்றியில் முதல் கோலை அவர் அடித்தார்.
பின்னர் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில், முதல் கோலை அடித்ததுடன், ஏஞ்சல் டி மாரியா என்பவர் இரண்டாம் கோலை அடிக்க உதவினார், இதனால் இவருடைய அணி கூடுதல் நேரத்தில் இரண்டாம் கோலை அடித்து 2–1 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றது.
தற்போது நடந்து வரும் 2014 ஆண்டிற்கான உலகக்கிண்ணத்தில் அர்ஜென்டினா அணியின் அணித்தலைவராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
சாதனைகள்
  • ஃபிபா U20 உலகக்கிண்ணத்தில் அதிக கோல்கள்: 2005
  • ஃபிபா U20 உலகக்கிண்ணத்தில் தொடர் நாயகன்: 2005
  • கோப்பா அமெரிக்கா டோர்னமென்டின் சிறந்த இளம் வீரர்: 2007
  • ஆண்டின் சிறந்த U21 ஐரோப்பிய கால்பந்தாட்ட வீரர்: 2007
  • அர்ஜென்டினாவின் சிறந்த விளையாட்டு வீரர்: 2005, 2007, 2009
  • ஆண்டின் சிறந்த இளம் வீரர்: 2006–2007, 2007–2008
  • சாம்பியன்ஸ் லீக் அதிக கோல்கள்: 2008–2009
  • ஃபிபா கிளப் உலகக்கிண்ணத்தில் தங்க பந்து: 2009

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக