தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 21 ஜூன், 2014

ரத்த சோகையை தடுக்கும் தேன் நெல்லிக்காய்

நெல்லிக்காய் சாப்பிட்டால் என்றும் இளமை கிடைக்கும்.
சர்க்கரை நோயாளிகள் நெல்லிக்கனியை தொடர்ந்து சாப்பிடலாம். கால்சியம், இரும்பு சத்துள்ள இந்த நெல்லிக்காய் தலைமுடியை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த நெல்லிக்காயை தேனில் கலந்து சாப்பிட்டால் இதய நோயாளிகளுக்கு நல்ல பலனளிக்கும்.
இதோ தேன் நெல்லிக்காய்,
தேவையானவை
பெரிய நெல்லிக்காய் – 10, தேன் – 100 மில்லி, சர்க்கரை – 200 கிராம்.
செய்முறை
நெல்லிக்காயை வில்லை வடிவமாக சீவவும். அதனுடன் சர்க்கரை சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறி பாகு காய்ச்சி நெல்லிக்காயும் சுருங்கும் சமயம் அடுப்பை நிறுத்தவும். நன்கு ஆறியவுடன் தேன் விடவும்.
குறிப்பு: தினமும் இரு துண்டு சாப்பிட்டால், ரத்த சோகையைத் தடுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக