தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 17 ஜூன், 2014

ஆஷ் துரை சுட்டு கொல்லப்பட்ட நாள் 17.06.1911. இனத்துரோகிகள்கருத்து என்ன தெரியுமா ?


இன்று !

ஆஷ் துரை சுட்டு கொல்லப்பட்ட நாள் 17.06.1911.

ஆங்கிலேய விசுவாசம் காட்டும் இனத்துரோகிகள்கருத்து இது,ஆனால் ஆங்கிலேயர் வீதியால் நாம் போவதை தடை செய்தது ஏனாம்?அவர்கள் நம்மை விட உயர்ந்தவர் என்பதால்த்தானே,அது இன்றும் அவுஸ்ரேலியாவில் உள்ளதே!!அமரிக்காவிலும் போராடியே சம உரிமை அந்நாட்டவரால் பெறப்பட்ட்டது,காந்தி போராடியது தென்னாபிரிக்காவில் எதை எதிர்த்தாம்??


''குற்றால அருவியில் தெய்வங்களும் , தெய்வத்திற்க்கு அடுத்தபடியான பிராமணர்களுமே குளிக்க முடியும், ஏனைய சாதியைச் சார்ந்த யாரும் குளிக்க கூடாது என்றிருந்த பார்ப்பன ஜாதி வெறியை உடைத்து அனைவரும் குளிக்கலாம் என்று உத்தரவிட்டவர் ஆஷ்.''என்பது நம்மில் எத்தணை பேருக்கு தெரியும்?

இது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளினாலேயே ஆங்கிலேய கலெக்டர் ஆஷ் துரை சனாதன வெறியன் பார்ப்பான் வாஞ்சிநாதனால் சுட்டு கொல்லப்பட்டார்,

காந்தி நிற வெறியருக்கு   எதிராக தென் ஆப்பிரிக்காவில்  போராடி புகழ் பெற்றாராம்,அந்த நிற வெறியர் யாரப்பா? ஜாதி வெறி என்கின்றீரே,நிற வெறியுடன்  நம் நாட்டை வஞ்சகத்தால் கவர்ந்த நரிகளுக்கு ஆதரவான நயவஞ்சகரே அடிமைகளே நீங்கள் நாளை உங்கள் தாய்மாரை கற்பழித்தவனையும் பாராட்டுவீர்கள்,அது உங்கள் ஜாதிப்புத்தி!அதை எப்படி மாற்றுவது!!தமிழனும் வெள்ளையனை விரட்ட போராடினான்,அது பற்றி ஏதாவது சொல்லுங்களேன்!!

இன்னொரு துரோகியின் பதிவு!
ஆஷ் துரை எனும் கொடுங்கோலனை வீரவாஞ்சி சுட்டு சாய்த்தான்,இது வரலாற்றுப் பதிவு.
ஆனால் மறைக்கப்பட்ட வரலாறு என்று இணையதளம் முழுவதும் வேறு மாதிரியாக செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன,அயோத்திதாச பண்டிதரும் அவ்வாறே பதிவு செய்துள்ளாராம்.

குறிப்பிட்ட சாதியினரும்,கடவுள் சிலைகளும் மட்டுமே குற்றால அருவியில் குளிக்கலாம் என்ற நிலையை மாற்றி,இயற்கையை அனுபவிப்பதில் என்ன பாகுபாடு என்று கேட்டு எல்லோரையும் அருவியில் குளிக்க அனுமதிக்க உத்தரவிட்டாராம்.

தன்னுடைய அலுவலக சிப்பந்திகள் வர்ண அடிப்படையில் பிரிந்து அமர்ந்து உணவு உண்பதை மறுத்து ஒன்றாக அமர்ந்து உண்ணுமாறு உத்தரவிட்டார்.

அலுவலகத்தில் எல்லோருக்கும் பொதுவாக குடிநீர் பாத்திரம் ஏற்பாடு செய்தார்.

பிரசவ வலியால் துடித்த அருந்ததியினப் பெண்ணைக் காப்பாற்ற பலத்த எதிர்ப்பை மீறி அக்ரகாரம் வழியே அப்பெண்ணை ஆஷ்துரையும் அவர் மனைவியும் கொண்டு சென்றனர்,குதிரை வண்டியை மறித்த இளைஞர்களை சாட்டையால் விளாசினார்,அடிவாங்கி ஓடிய இளைஞர்களுள் ஒருவர் வாஞ்சிநாதன் என்கிறது ஒரு செய்தி.

வாஞ்சியின் இறுதிக் கடிதத்தில் இருக்கும் பஞ்சமன்,கோமாமிசம் உண்ணும் மிலேச்சன் போன்ற வார்த்தைகளும் வாஞ்சியின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

மேலே கூறிய செய்திகள் உண்மையாக இருப்பின் ஆஷ்துரையை சிறப்பிக்க சமத்துவநாயகன் என்ற வார்த்தையைத் தவிர வேறு எதுவும் புலப்படவில்லை.

இன்று ஆஷ்துரையின் நினைவு நாள்,சமத்துவ நாயகனை போற்றி வணங்குகிறேன்


யுவான் சுவாங்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக