தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 17 ஜூன், 2014

சமையலறையில் இருங்கீங்களா? அப்போ இதில் கவனமா இருங்க!

சமையலறையில் பெண்கள் அவசர அவசரமாக சமையல் செய்யும் போது சில விபரீதங்களை சந்திக்க நேரிடுகிறது.
அவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால், சமையலறையில் வைத்து யோசிப்பது, பின்னர் வைத்த பொருட்களை இடம் தெரியாமல் தேடுவது என இது போன்ற சம்பவங்களால் உணவினை ருசியாக செய்ய கோட்டை விட்டுவிடுகின்றனர்.
ஆதலால், வீட்டில் அளவுக்கு அதிகமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய ஒரே இடம் சமையலறை தான்.
மேலும் உங்கள் சமையலறையில் உள்ள பொருட்களை பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் தேவை.
குழந்தைகளை விடாதீர்கள்
சமையலறையில் நீங்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது உங்கள் கவனத்தை திசை திருப்புவத்தில் குழந்தைகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
பல காரணங்களுக்காக, கூர்மையான பல கருவிகள் அங்கே அடுப்பு மேடையில் இருப்பதால், அதனை கொண்டு அவர்கள் தங்களை காயப்படுத்திக் கொள்ளலாம். அதனால் குழந்தைகளை சமையலறையை விட்டு வெளியேற்றுங்கள்.
உங்களுக்கு ஏதாவது ஒரு வேலையில் உதவி செய்தால் மட்டுமே அவர்களை அனுமதிக்க வேண்டும். சூடான பாத்திரங்களை கையாளும் போதும் சூடு பட்டு விடலாம்.
அவசரமாக செயல்படாதீர்கள்
அவதி அவதியுடன் வேலை பார்ப்பதாலேயே சமையலறையில் பல விபத்துகள் நடைபெறுகிறது.
வேகமாக வேலை செய்யும் போது கவனக்குறைவு ஏற்பட்டு அதனால் விபத்துகள் நேரிடும். காய்கறிகளை வேகமாக நறுக்காதீர்கள், அதனால் உங்கள் விரல்கள் வெட்டுப்படலாம்.
அதே போல் அடுப்பில் இருக்கும் சூடான சட்டி அல்லது குக்கரை வேகமாக இறக்க முற்படாதீர்கள். அது உங்கள் மேலே விழுந்து விடலாம். செய்யும் வேலையை பொறுமையுடன் செய்யுங்கள்.
ஹாட் பேட்கள்
சமையலறையில் சூடான சட்டிகள் மற்றும் குக்கர்களை கையாள ஹாட் பேட்களை (சூட்டை தாங்கும் கையுறை) பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
மைக்ரோவேவ்வில் வைக்கப்படும் பாத்திரங்களில் பொதுவாக கடும் சூடு இருக்கும். அவைகளை வெறும் கையால் தொடவே முடியாது.
அவைகளை தூக்க ஹாட் பேட்கள் கண்டிப்பாக தேவைப்படும். தீக்காயங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க அவைகளை கண்டிப்பாக பயன்படுத்துங்கள்.
கிண்டும் போது தள்ளி நில்லுங்கள்
அடுப்பில் எதையாவது கிண்டும் போது, நீங்கள் நிற்கும் திசையை நோக்கி கிண்டாதீர்கள். நீங்கள் நிற்பதற்கு எதிர் திசையிலேயே எப்போதும் கிண்டுங்கள். அப்படி செய்தால் சமைக்கும் போதோ கொதிக்க வைக்கும் போதோ, தீக்காயங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.
இது பொதுவாகவே நம்மில் பலர் செய்யும் தவறாகும். அதனால் கொதிக்கும் நீர் அல்லது எண்ணெயினால் உடல் பகுதிகளில் கொப்புளங்கள் ஏற்படலாம்.
கத்திகளை திறமையாக பயன்படுத்த வேண்டும்
சமையலறையில் கத்தியை கையாளுவது, சமையலறையில் உள்ள சவாலான வேளைகளில் ஒன்றாகும்.
எப்போதும் கூர்மையான கத்தியை பயன்படுத்த வேண்டும். காரணம் மொட்டை கத்தி அடிக்கடி வழுக்கி, காயங்களை ஏற்படுத்தும். காயம் ஏற்படாமல் கத்தியை எப்படி திறமையாக எப்படி கையாளுவது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் முனைப்பாக பயன்படுத்தாத கையை பொருட்களை பிடிக்க பயன்படுத்துங்கள். பின் முனைப்புடன் செயல்படும் கையை கொண்டு அதனை கத்தியை கொண்டு அறுக்க பயன்படுத்துங்கள். நன்றாக பழக்கம் ஏற்படும் வரை கத்தியை மெதுவாக கையாளுங்கள்.
சிந்திய பொருட்களை சுத்தமாக துடைத்தல்
சமைக்கும் போது சில பொருட்கள் சிந்தும். கீழே சிதறி கிடக்கும் பொருட்களை துடைக்க தயங்காதீர்கள். அவைகள் விபத்துகள் ஏற்பட காரணமாக அமையலாம். எந்த ஒரு கரைகளும் இன்றி அவைகளை சுத்தமாக துடைக்க மறக்காதீர்கள்.
பொருட்களை தூக்கும் போது கவனமாக இருங்கள்
சூடான சட்டிகளை தூக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களால் எவ்வளவு எடையை சுலபமாக தூக்க முடியும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
உங்களால் சில பாத்திரங்களை தூக்க சிரமமாக இருந்தால், வீட்டில் உள்ள ஆண்களின் உதவியை பெற்றுக் கொள்ளுங்கள். இல்லையென்றால் அதில் உள்ளதை கொஞ்சம் கொஞ்சமாக வேறு சில பாத்திரத்தில் மாற்றி அவைகளை தேவையான இடத்திற்கு தூக்கிச் செல்லுங்கள்.
சூடான உணவுகளின் மீது வரும் ஆவியை கவனியுங்கள்
கொதிக்கும் உணவு மேலே பட்டால் எவ்வளவு காயம் ஏற்படுமோ, அதே அளவு காயம், உணவின் ஆவி முகத்தில் அடிக்கும் போதும் ஏற்படும். ஆவி பறக்கும் உணவுகளை கையாளும் போது அதிக கவனம் தேவை. உதாரணத்திற்கு, மைக்ரோவேவ்வில் எதையாவது கொதிக்க வைக்கும் போது, அதன் மூடி உங்கள் பக்கம் திறந்து இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக