தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 6 ஜூன், 2014

மோனோகுரோட்டபஸ் பயங்கரம்


மோனோகுரோட்டாபஸ் ஆர்கனோபாஸ்பேட் என்ற நஞ்சால் உருவாக்கப்பட்ட பூச்சுக்கொல்லி. அர்ஜென்டினாவில் தொடர்ச்சியாக இந்த பூச்சிக்கொல்லியை உபயோகப்படுத்தியதன் விளைவாக 20000க்கும் மேற்பட்ட பருந்துகள் இறந்தன. இங்க பருந்தினம் அழியும் நிலையில் உள்ளதைத்தொடர்ந்து அங்கே தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அமேரிக்கா உட்பட பல நாடுகளிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நஞ்சானது நம்பியல் பாதிப்பை ஏற்படுத்துவதும், கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை தங்குவதில் பிரச்சனை ஏற்படுத்துவது மட்டுமல்ல பிரசவத்தையும் சிக்கலாக்குகிறது. குழந்தை ஊனமுற்று பிற்ப்பத்தற்கும் ஒரு காரணமாகிறது.. ஜுலை 2013 அன்று பீகாரில் 23 பள்ளிக்குழந்தைகள் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டு இறப்பதற்கு இந்த நஞ்சை வைக்கப்பயன்டுத்திய குடுவையில் எண்னையை சேமித்து பயன்படுத்தியதுதான் காரணம்.. தேனீகளையும் இது அழிக்கிறது.. இதன் பாதிப்பு மிக அதிகம் என பல மருத்துவ ஆய்வறிக்கைகள் நிருபித்து உள்ளன.. இப்படி பறவைகளையும் . தேனீக்களையும்ம் அழித்து விவசாயத்தை சீர்குலைப்பது மட்டுமல்லாமல் தலைமுறை தலைமுறைய மரபணு ரீதியாக நம்ம்மை நோயாளியாக்கும் இந்தக்கொடிய நஞ்சை இங்கு சர்வசாதாரணமாக பயன்படுத்தி சூழலையும், நம் சந்ததியின் ஆரோக்கியத்தையும் தொடர்ந்து சீர்குலைத்து வருகிறோம்

உதாரணத்திற்கு ஈரோடுப்பகுதியில் மஞ்சள் காட்டில் ஒரு ஏக்கருக்கு வருசத்துக்கு 10 லிட்டர் மோனோகுரோட்டபஸை தெளிக்கிரோம் என்றால் இந்தப்பகுதியில் 10000 ஏக்கருக்குமேல் மஞ்சள் பயிரிடப்பட்டு வருகிறது அப்படியானால் எவ்வளவு நஞ்சை இந்த மண்ணிலும் , காற்றிலும் கொட்டி இருக்கிறோம். எத்தனை ஆயிரம் பறவைகளை சாகடித்து இருக்கிறோம்.. அதுமட்டுமில்லாமல் 25நாள் பயிரான கீரையிலும் 5வது நாள் மற்றும் 15வது நாளில் தெளிக்கிறார்கள்..யோசித்துப்பாருங்கள் தோழர்களே நாம் எத்தனை கொடிய நஞ்சை தடவி உணவு உண்கிறோம் என.......


மீதி எங்கே??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக