தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, June 27, 2014

உடல் செயலிழந்த நபர் எண்ணத்தின் சக்தியால் கையை அசைத்த அதிசயம் (வீடியோ இணைப்பு) !

உலகில் முதல் முறையாக செயலிழந்த நபர் ஒருவர், தனது எண்ணத்தின் சக்தியால் தனது கையை அசைத்துள்ளார்.
அமெரிக்க ஒஹியோ மாநிலத்தில் டப்ளின் நகரைச் சேர்ந்த அயன் புர்கார்ட் (23 ) என்பவர் ,2010ம் ஆண்டு வடகரோலினா கடற்கரை பகுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் முள்ளந்தண்டு சேதமடைந்ததால் அவர் உடல் செயலிழந்த நிலைக்கு உள்ளானது.
இந்நிலையில் ஒஹியோ மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்களை உள்ளடக்கிய குழுவினர் புர்கார்ட்டின் மண்டையோட்டை அறுவைச்சிகிச்சை மூலம் திறந்து அதனுள் அவரது எண்ணங்களை வாசிப்பதற்கான 0.15 அங்குல அளவான சிப் உபகரணமொன்றைப் பொருத்தினர்.
மேற்படி சிப் உபகரணமானது அவரது எண்ணங்கள் தொடர்பான தகவல்களை கணினியொன்றுக்கு அனுப்பப்படுகிறது. அந்தக் கணினியானது அந்தத் தகவல்களை முள்ளந்தண்டிலிருந்து வழங்கப்படுவதையொத்த கட்டளைகளாக மாறுகிறது.
நோயாளியின் கரத்துடன் இணைக்கப்பட்டுள்ள அந்தக் கணினி அவரது எண்ணத்திற்கு ஏற்ப அவர் கையை அசைப்பதற்கு தூண்டுகிறது.
இந்த தொழில் நுட்பமானது நோயாளி கையை அசைக்க வேண்டும் என நினைத்ததும் ஒரு செக்கன்டில் பத்திலொரு பகுதியிலும் குறைந்த நேரத்தில் கையை அசைக்க வழிவகை செய்கிறது.
இந்த தொழில்நுட்பமானது தசைகள் தொடர்பான ஒழுங்கீனங்களுக்கும் உள்ளாகி உடல் செயலிழந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உதவும் ஒன்றாக உள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment