தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 27 ஜூன், 2014

ஸ்மார்ட்போன்களில் உரிமையாளரின் பக்டீரியா அடையாளங்கள்!

ஒவ்வொரு ஸ்மாட் போனும் அதன் உரிமையாளரை பிரத்தியேகமாக அடையாளம் காணக்கூடிய நுண்ணுயிர்களை கொண்டிருக்க கூடுமென அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.
ஒவ்வொரு மனிதரினதும் விரல் அடையாளங்கள் எந்தளவு தனித்துவமானதோ, அந்தளவு தனித்துவமான பக்டீரியாக்கள் தொகுதிகளும்; இருக்கின்றன. இந்த தனித்துவமான பக்டீரியா தொகுதி ஸ்மாட் போனின் தொடுதிரையில் பிரதிபலிப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பக்டீரியாக்கள் எந்தளவு பரவி இருக்கின்றன என்பதை கண்டறிவதற்கு ஸ்மாட் போன்களை பயன்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டி உள்ளார்கள்.
மனிதனது உடலுக்குள்ளேயும், வெளியேயும் கோடான கோடி நுண்ணுயிர்கள் வாழ்கின்றன. இவற்றின் வரைபடத்தை ஸ்மாட் போன்களில் பெறலாம் என்பது விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக