இயற்கையின் பல அம்சங்களை தன்னகத்தே கொண்டு காணப்படும் பிரித்தானியா நாட்டில் இதுவரை கண்டறிய முடியாத 5 பெரும் மர்மமான வழக்குகளை காண்போம்,
பெண்கள் கற்பழித்து கொலை
1. கடந்த 1986ம் ஆண்டு பிரித்தானியாவின் ப்ரைடன் நகரில் நிக்கலோ(10) மற்றும் அவரது தோழி கரேன் (9) அகிய இரு பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொலையில் பொலிசாரால் இதுவரை எந்தவித துப்பும் கண்டறிய முடியவில்லை. மேலும் இதனை விசாரித்து வந்த காட்ரினா டெய்லர் என்ற பொலிசாரும் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இரண்டு இரண்டு முறை சந்தேகத்தின் பெயரில் நிதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட குற்றவாளிகள் தப்பித்து விட்டனர் என்பது குறிப்பிடதக்கது.
தங்கத்தால் உயிர் போன கொடுமை
கடந்த 1914ம் ஆண்டு அல் நகரை சேர்ந்த ஆம்ப்லர் (72) என்ற நபரிடமிருந்த தங்கத்திற்காக தலையில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
ஜூலியா வாலேஸ்
1932ம் ஆண்டு நடந்த ஜூலியா வாலேஸின் கொலை மர்மமாகவே உள்ளது, இவர் அவரது கணவரால் கொலை செய்யப்பட்டார் என கருதப்பட்டு அவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது, ஆனால் பின்னர் சாட்சி இல்லாத காரணத்தால் தீர்ப்பு மாற்றப்பட்டது.
எந்தவித குறிகோலும், ஆயதமும் இல்லாமல் நடந்த இந்த கொலையில் இதுவரை எவரும் சாட்சியங்களுடன் சிக்கவில்லை.
மர்மமான மாயம்
1986ம் ஆண்டு சுசி லெம்பலக் (25) என்ற நபர் மர்மமான முறையில் மாயமானர். பல கட்ட விசாரணைகள் மற்றும் சாட்சியங்களில் இவர் 1993ம் ஆண்டு இறந்ததாக அறிவிக்கப்பட்டார்.
இவரது வழக்கை 2010ம் ஆண்டு வரை விசாரித்து வந்தனர். ஆனால் இவரது உடல் கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருப்பு குழந்தை
2011ம் ஆண்டு தேம்ஸ் நதி அருகே உடலில் தலையில்லாமல் கருப்பு குழந்தை பாலத்தின் அருகில் கிடந்தது.
ஆனால், இந்த கொலைக்கு யார் காரணம் என இன்னும் அரியபடவில்லை.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக