தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

"பெப்பர் ரோபோ": உடலுறவு வேண்டாம் என எச்சரிக்கும் தயாரிப்பு நிறுவனம்

பேசும் திறனுடன், மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் வசதியுடன் "பெப்பர்" ரோபோ ஒன்றினை ஜப்பானின் சாப்ட்பேங்க் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
120 செ.மீ. உயரம் உள்ள இந்த நகரும் ரோபோக்கள், ஆண்ட்ராய்டு வசதி கொண்டதாகும்.
இந்த ரோபோக்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ‘சாப்ட்பேங்க்’ நிறுவனம் கண்டிப்பான கட்டளை ஒன்றை போட்டுள்ளது.
எக்காரணம் கொண்டும் இந்த ரோபோவுடன் உடல் ரீதியான தொடர்பு (செக்ஸ்) அல்லது அதுபோன்ற கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.
இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டால் மட்டுமே இந்த ரோபோக்களை வாங்க முடியும். அதையும் மீறி இத்தகைய செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு அபராதம் உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்படும் என ‘சாப்ட்பேங்க்’ அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக