தாவரங்கள்,
விலங்குகள் உட்பட ஆறில் ஒரு உயிரினத்தின் வாழ்வில் காலநிலை மாற்றமானது
பாரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.தென்
அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தை அடிப்படையாகக் கொண்டு
மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் போது, தற்போது உள்ள வெப்பநிலையானது மேலும்
நான்கு டிகிரி செல்சியசினால் அதிகரிக்கும் போது 16 சதவீதமான உயிரினங்கள்
அழிந்து போகும் என மேலும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த ஆய்வினை மேற்கொண்டவர்களுள் ஒருவராக கனடியன்
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் மார்க் ஏர்பன் என்பவரும்
காணப்படுகின்றார்.
இவர் காலநிலையினால் அழிவை எதிர்நோக்கியுள்ள உயிரினங்கள் தொடர்பான 131
ஆய்வுகளின் தரவுகளையும் பகுப்பாய்வு செய்த தகவல்களையும் உள்ளடக்கியே
மேற்கண்ட வெளியிடப்பட்டுள்ளன.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக