தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 1 மே, 2015

கருணை இரண்டு வகை !



அறக்கருணை என்றும்..மறக்கருணை என்றும் இரண்டு வகை உண்டு !

அறக்கருணை என்பது ;--கொலை செய்யாமலும்,புலால் உண்ணாமலும் இருப்பவர்கள் செய்யும் கருணை ..அதாவது ஜீவ காருண்யம் அவர்களையும்,அவர்கள் குடுப்பத்தையும் பாது காக்கும்.

மேலும் அவர்கள் உயிரையும் பாதுகாக்கும்.அவர்கள் கருணையை இறைவன் ஏற்றுக் கொள்வார் .அவர்கள் தகுதிக்குத் தகுந்தாற் போல் அருளையும் வழங்குவார் .

மறக்கருணை என்பது ;--??போரில் எதிரியை மன்னித்தலோ?


உயிர்க் கொலை செய்பவர்களும், புலால் உண்பவர்களும்,எவ்வளவுதான் கருணை செய்தாலும்,அதாவது ஜீவ காருண்யம் செய்தாலும்,அவர்கள் கருணையை இறைவன் ஏற்றுக் கொள்வதில்லை.

மேலும் இறைவனால் படைக்கப்பட்ட உயிர்களை கொலை செய்வதும்,அதன் புலாலை உண்பதும்,தண்டிக்கத் தகுந்தவைகளாகும்,அவர்கள் எவ்வளவு கருணை என்னும் தர்மம் செய்தாலும் இறைவன் ஏற்றுக் கொள்வதில்லை.

கொலை செய்பவர்களுக்கும் புலால் உண்பவர்களுக்கும், இறைவன் அருள் கிடைக்கவே கிடைக்காது.அவர்களுக்கு துன்பங்கள் வந்து கொண்டே இருக்கும்.

மேலும் அவர்கள் மரணம் அடைந்தால் மனித தேகம் எவ்வகையிலும் கிடைக்காது கீழ் பிறவியான தண்டனை தேகங்களே கிடைக்கும்

ஆகவே உயிர்க்கொலை செய்பவர்களும்,புலால் உண்பவர்களும் ,தான் செய்யும் தவறை உணர்ந்து கொலை செய்யாமலும் புலால் உண்ணாமலும் அறக்கருணை என்னும் ஜீவகாருண்யம் செய்து,தாவர உணவுக்கு மாறி இறைவனின் கருணைக்கு பாத்திரமாகி இறைவன் அருளைப் பெற வேண்டும்.

ஆதலால் மறக்கருணையை விட்டு அறக்கருணைக்கு வாருங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் .

உங்கள் மீது உள்ள ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் ,என்னுடைய சகோதர உரிமையுடன் உங்களுக்கு இந்த நல்ல செய்தியை பறிமாறிக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.

இதுவரையில் உயிர்க்கொலை செய்து இருந்தாலும், ,புலால் உணவை உண்டு இருந்தாலும் ,இனிமேல் அதை தவிர்த்து இறைவன் அருளைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழுங்கள் .

அறியாமல் செய்த தவற்றை உணர்ந்து செயல்பட்டால், எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மன்னித்து அருள்புரிவார் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக