தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 13 ஏப்ரல், 2015

காலை உணவோடு தினமும் இதனை சாப்பிடுங்கள்

காலை உணவோடு தினமும் முட்டை சாப்பிட்டால் உடலை கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழக உணவுத்துறை, உடல் எடை அதிகம் கொண்டவர்களின் உணவில் முட்டையின் பங்கு என்ன என்பது குறித்து விரிவான ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
உடல் பருமன் கொண்டவர்களுக்கு காலை உணவில் முட்டையை வேக வைத்துக் கொடுக்கப்பட்டது. இதனால் உடலில் தெம்பு அதிகரித்து, சுறுசுறுப்பு ஏற்பட்டதோடு நீண்ட நேரம் வயிறு நிறைந்திருக்கும் உணர்வு ஏற்பட்டது.
இதன் மூலம் அவர்களுக்கு மதிய உணவு, மாலை டிபன் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளும் அளவு குறைந்தது.
உணவின் அளவு குறைந்ததினால் உடலின் கலோரிகளின் அளவும் குறைந்தது. இதனால் அவர்களின் உடல் எடை உயர்வது தடுக்கப்படுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
உணவில் உயர்தர புரதம் சேர்ந்தால் ஒட்டுமொத்த உடல்நலனுக்கு நல்லது. குறிப்பாக, புரதம் அதிகமுள்ள முட்டையை காலை உணவில் சேர்ப்பதன் மூலம் உடல் எடை அதிகரிப்பது கட்டுப்படுத்தப்படுகிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
காலையில் முட்டை சாப்பிடுவதன் மூலம் அதில் உள்ள உயர்தர புரதமும், உயர்தர கொழுப்பும் உடலின் சக்தியை நாள் முழுவதும் தக்க வைக்கிறது. இதனால் அடிக்கடி நொறுக்குத்தீனி சாப்பிடுவது தடுக்கப்படுகிறது
மேலும், முட்டையில் உள்ள தேவையான அமினோ அமிலங்கள் உடலுக்கு நன்மை தருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக