தேவர்களும், அசுரர்களும் இணைந்து மேரு மலையை மத்தாகவும், வாசுகி பாம்பினை கயிறாகவும் கொண்டு பாற்கடலை கடைந்தார்கள். அந்நிகழ்வில் வெளிபட்ட ஆலகாலத்தினை சிவன் உண்டபின்பு, பாற்கடலிருந்து, திருமகள், அரம்பையர்கள், ஐராவதம், உச்சைசிரவம் போன்றவை தோன்றின. இறுதியாக அமுதம் தோன்றியது.
அமுதம் இறவாமையை தரவல்லது என்பதால் அசுரர்கள் அருந்த கூடாதென திருமால் மோகினியாக அவதாரம் எடுத்தார். மோகினியின் அழகில் மயங்கிய அசுரர்களுக்கு சாதாரண பாணத்தினையும், தேவர்களுக்கு அமுதத்தினையும் அளித்தார்.
தொடர்ந்து..அசுரர்களின் அரசனான பஸ்மாசுரன் என்பவர் சிவபெருமானை நோக்கி தவமியற்றி, தான் யார் தலையில் கைவைத்தால் அவர்கல் சாம்பல் ஆகும் வரம் பெற்றார். அதனை சிவபெருமானிடம் சோதிக்க எண்ணி அவரை துரத்தினார்.
அந்நேரத்தில் திருமால் மோகினி அவதாரம் எடுத்து பசுமாசுரனை தனது அழகினால் மயக்கி காமம் கொள்ளச் செய்தார். மோகம் கொண்ட பஸ்மாசுரனை தன்னுடன் ஆடும் படி கூறி, மோகினி ஆடினாள். அவளுடைய நடன முறைகளை பின்பற்றி ஆடிய பஸ்மாசுரன் தான் பெற்ற வரத்தினை மறந்து தலையில் கைவத்தார். சிவபெருமான் தந்த வரத்தின்படி பஸ்மாசுரன் அழிந்தார்.
பாற்கடல் அமுதம் கடைந்து அதை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் மோகினி உருவத்தில் இருந்த விஷ்ணு பகிர்ந்தளித்த லீலையின் போது சிவபெருமான் ஆழ்ந்த யோகத்தில் இருந்ததால் சிவபெருமானால் அந்த மோகினி அவதாரத்தினை தரிசிக்க இயலாமல் போனது. பின்னர் யோகம் களைந்து எழுந்த பொழுது நடந்த திருவிளையாடல்களை அறிந்த சிவபெருமான் விஷ்ணுவின் அந்த மோகினி அவதாரத்தை தரிசிக்க வேண்டினார்.
காண்போரை மோகத்தில் ஆழ்த்தும் வல்லமையுடைய மோகினி அவதாரத்தினை திருமால் மீண்டும் எடுத்தார். அத்துடன் ஒரு வனத்தில் சென்று மறைந்தார். மோகினியினை காண சென்ற சிவபெருமான் வனத்தின் ஒரு மரத்தில் விளையாடிக்கொண்டிருந்த மோகினியை கண்டார். அவருக்கும் மோகனம் வந்தது. உடனிருக்கும் பார்வதியை மறந்து மோகினி அடைய எண்ணினார்.
அப்பொழுது சிவனும் மோகினியும் உறவு கொண்டார்கள். அவர்களுக்கு பிறந்தவரே ஐயப்பன் ஆவார்.
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF?hc_location=ufi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக