தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 17 ஏப்ரல், 2015

டிரோன் மூலம் இணைய வசதி: வெற்றி பெற்ற முதல் சோதனை (வீடியோ இணைப்பு)


அன்றாட தேவைக்கும் இணைய வசதி அவசியம் என்று நிலை மாறிவிட்டதால், இணைய சேவையை அனைவருக்கும் வழங்கும் முயற்சியில் பல நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன.
தற்போதைய நவீன காலக்கட்டத்தில் இணைய வசதிகள் இல்லாமல் ஒரு வேலையும் நடக்காது என்ற நிலை வந்து விட்டது.
தினசரி இணையத்தை மட்டுமே நம்பி இருப்பவர்களும் அதிகமாகி விட்டனர்.
இந்த இணைய சேவையானது நகர் புற மக்களுக்கு எளிதாக கிடைக்கிறது. ஆனால் சில கிராம புறங்களில் இணைய வசதி என்பது நினைத்து பார்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.
இதை கருத்தில் கொண்ட பேஸ்ஃபுக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், பேஸ்ஃபுக் பயன்பாட்டிற்காக கடந்த வருடம் இணைய சேவை இல்லாத பகுதிகளுக்கு டிரோன் (Drone-ஆளில்லா விமானம்) மூலம் இணைய சேவையை வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.
இந்த திட்டத்தின் மூலம் 3 மில்லியன் மக்கள் பயனடைவார்கள் என்றும், இதற்கான வேலையை சிறப்பாக தொடக்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் போர்த்துக்கல் நிறுவனம் சோலார் மூலம் இயக்கும் டிரோனை வெற்றிகரமாக வானில் செலுத்தி சோதனை செய்துள்ளது.
Quarkson என்ற நிறுவனம் SkyOrbiter டிரோன்களை பயன்படுத்தி இந்த முயற்சியில் களமிறங்கி உள்ளது.
இந்த வகை டிரோன்கள் 21,000 மீற்றர் உயரத்தில் வாரம், மாதம் மற்றும் வருட கணக்கில் கூட வானத்தில் வட்டமிடக் கூடியவை என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த டிரோனில் பொருத்தப்பட்டுள்ள Wi-Fi Transmitter கொடுக்கும் சிக்னல் (Signal) தரைப் பகுதியில் வைப்பட்டுள்ள Receiver-வை வந்தடைகிறது. இதனால் இணைய வசதி இல்லாத இடங்களுக்கு கூட இந்த signal கிடைக்கிறது.
தற்போது சோதனையில் ஈடுபடுத்தப்பட்ட டிரோனின் இறக்கையானது 5 மீற்றர் கொண்டது. இதனால் 100 மீற்றர் உயரத்தில் தாராளமாக பறக்க முடியும்.
Quarkson நிறுவனம், SkyOrbiter LA25 என்ற டிரோனில் 22 மீற்றர் அளவுள்ள இறக்கையை பயன்படுத்தப் போவதாகவும், இதனால் அதிக உயரத்திற்கு சென்று Signal-ஐ பல இடங்களுக்கு கொடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
இவை சூரிய ஒளியில் இருந்து தேவையான சக்தியை எடுத்துக் கொண்டு தானாக இயங்குபவையாகவும், அதிக தூர தொலைத் தொடர்புக்கு பயன்படும் வகையில் பல அதிர்வெண்களில் வேலை செய்யக் கூடியதாகவும் இருக்கும்.
மேலும் இந்த முழு அமைப்பை கீழே இருந்து கொண்டு கட்டுப்படுத்த முடியும் என்றும், இவற்றின் மூலம் உரிமம் பெற்ற ஸ்பெக்ட்ரம் வழியாக Wi-Fi, LTE, 3G or 2G ஆகியவற்றை பெற முடியும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
இந்த முறை பயன்பாட்டுக்கு வரும்போது தற்போது இணைய வசதி இல்லாமல் தவித்து வரும் பலரும் பயனடைவார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக