ஒரு நிமிடத்தில் சார்ஜிங்! புதிய ஸ்மார்ட்போன் பேட்டரி (வீடியோ இணைப்பு)
ஸ்டான்போர்ட் ஆய்வாளர்கள் ஸ்மார்போனிற்காக புதிதாக ஒரு அலுமினியம் பேட்டரியை உருவாக்கியுள்ளனர்.
பொதுவாக ஆல்கலைன் மற்றும் லித்தியம் அடிப்படையிலான பேட்டரிகளே பயன்பாட்டில் உள்ளன.
இவற்றில் ஆல்கலைன் பேட்டரிகள் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிப்பவையாகவும், லித்தியம் பேட்டரிகள் தீப்பிடிக்கும் அபாயம் கொண்டவையாகு இருக்கிறது.
அதே போல் அலுமினியம் பேட்டரியை அதிக முறை சார்ஜ் செய்யக்கூடியதாக அவற்றை உருவாக்குவது சவாலாக உள்ளது.
இந்நிலையில் 2 வோல்ட் சார்ஜ் திறன் கொண்ட அலுமினியம் பேட்டரிகளை ஸ்டான்போர்டில் உருவாக்கியுள்ளனர்.
இந்த பேட்டரி எதிர்மறை ஆற்றல் கொண்ட அலுமினிய ஆனோட் மற்றும் கிராபைட்டிலான கேத்தோடைக் கொண்டுள்ளது.
இந்த தொழிநுட்பம் பற்றிக் கேள்விப்பட்டால் நம்ப முடியவில்லை. ஏனென்றால் ஒரு நிமிடத்தில் பேட்டரி சார்ஜ் ஆகிவிடும் என்று சொல்லப்படுகிறது.
மேலும் இதை வளைத்தாலும் பாதிப்பு ஏற்படாத தன்மை கொண்டிருக்கிறது. இதில் துளையிட்டாலும் தீப்பிடிக்காதவாறு உள்ளது.
7,500 சார்ஜிங் சுழற்சிக்கு இது தாக்குப்பிடிக்கும் என்றும், எதிர்காலத்தில் இவை ஸ்மார்ட் போனில் பயன்பாட்டிற்கு வரலாம் எனவும் ஆய்வாளர்கள் உற்சாகமாகக் கூறுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக