புத்துணர்ச்சிக்காக விநோத குளியல் போடும் ஜப்பான் மக்கள் (வீடியோ இணைப்பு)!
ஜப்பானின் மூன்றாவது பெரிய தீவான கியுஷுவில் உள்ள எரிமலைப் பகுதிகளில் இருந்து எடுத்து வரப்படும் ஈரமண்ணை கொண்டு மக்கள் மண் குளியல் போடுகின்றனர்.
கியுஷு (Kyushu) தீவில் எரிமலைகள் அதிகளவில் காணப்படுவதால் அங்கே பெருமளவில் வெந்நீர் ஊற்றுகள் காணப்படுகின்றன .
இங்கே நிலவும் பருவநிலைக்காகவும், இயற்கையாக அமைந்துள்ள பல வெந்நீர் ஊற்றுகளுக்காகவும் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறார்கள்.
மேலும், இங்கு செயல்படும் ஸ்பாக்களில் செய்யப்படும் மண் குளியல் மக்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்த தவறுவதில்லை.
இங்கு சிறப்பு அம்சமாகக் கருதப்படும் இந்த மண் குளியலுக்காக எரிமலைப் பகுதிகளில் இருந்து ஈரமண்ணை எடுத்து வருகின்றனர்.
இந்த ஈரமண்ணை ஒரு பெட்டியில் போட்டு, அந்த பெட்டிக்கு அடியில் ஊற்றுகளில் இருந்து கிடைக்கும் நீரைச் சூடேற்றுகின்றனர்.
மண் சூடாக இருக்கும்பொழுது, மனிதர்களைப் பெட்டிக்குள் படுக்க வைத்து மேலே மண்ணைக் கொட்டி மூடி விடுகிறார்கள்.
அல்லது கடற்கரை மணலில் பள்ளம் தோண்டி, மணல் குளியல் எடுக்கும் நபர்களை படுக்க வைத்து, உடல் மேலே அந்த மணலை கழுத்து வரை கொட்டுகின்றனர்.
அந்த மண்ணில் உள்ள வெப்பம் குறைந்தவுடன் மனிதர்களை வெளியில் எடுத்து வெந்நீர் ஊற்று நீரால் குளிக்க வைக்கின்றனர்.
இந்த வினோத மண் குளியலை எடுப்பதற்காகவே பலர் இந்த பகுதிக்கு சுற்றுலா வந்து செல்கின்றனர்.
இந்த மண் குளியலால் குழந்தையின்மை, சர்க்கரை நோய், ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் சரியாகும் என்றும் உடல் எடை குறையும் என்றும் சுற்றுலா வரும் மக்கள் நம்புகின்றனர்.
மேலும், இந்த குளியலால் மக்களுக்கு நோய் சரியாகிறதோ, இல்லையோ ஆனால் கண்டிப்பாக புத்துணர்ச்சி கிடைப்பதாகப் பலரும் ஒப்புக்கொள்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக