இயற்கையை காதலிப்பவரா நீங்கள்? கண்டிப்பாக இங்கு செல்லவும் (வீடியோ இணைப்பு)
செஷல்ஸ் தீவுகள் (Seychelles Islands) வடக்கு இந்திய பெருங்கடலில் சுமார் 115 சிறிய தீவுகளை கொண்டு அமைந்துள்ளது.
1770-ல் ஃபிரெஞ்சு அரசின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த தீவுகள், நெப்போலியன் வாட்டர்லூவில் தோல்வியடைந்ததை அடுத்து 1814-ல் பிரித்தானியாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.
இதையடுத்து விக்டோரியாவை தலைநகரமாக கொண்டு செயல்பட தொடங்கிய இந்த தீவுகள் பிரித்தானியாவிடம் இருந்து 1976ம் ஆண்டு விடுதலை பெற்றுள்ளது.
தற்போது சுமார் 90,000 மக்கள் தொகையை கொண்டு விளங்கும் இந்த தீவுகளில், பல்வேறு மதம், மொழி, இனத்தினை சேர்ந்த மக்களும் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இயற்கை எழில் கொஞ்சும் இந்த தீவுகளின் 50 சதவிகித இடங்களில், தேசிய பூங்காக்களும், வனப்பகுதிகளும் நிறைந்து காணப்படுகின்றன.
மேலும், உலகின் எந்த மூலைகளிலும் காணமுடியாத அழிவின் விளிம்பில் உள்ள எண்ணற்ற செடிகள், மரங்கள் மற்றும் அளவில் மிகச்சிறிய தவளை முதல் மிகப்பெரிய ஆமை போல் விதவிதமான உயிரினங்கள் இங்கு வாழ்ந்து வருகின்றன.
Aride Island Nature Reserve
இந்திய பெருங்கடலின் அணிகலன் போல காட்சியளிக்கும் இந்த தீவுகள், முக்கியமான இயற்கை வளங்களை கொண்டு விளங்குகிறது.
சுமார் 1 மில்லியன் கடற்பறவைகளுக்கு இல்லமாக உள்ள இந்த தீவில் எண்ணற்ற பறவைகளும், செடி கொடிகளும் அமைந்துள்ளன.
மேலும், அழிவின் விளிம்பில் உள்ள பறவைகள், செடிகள் மற்றும் கடல் உயிரினங்கள் இங்கு உள்ளன.
இயற்கையை விரும்பும் சுற்றுலாவாசிகள் இந்த அழகிய தீவினை காண படையெடுக்கின்றனர்.
Cousin island
ரிசர்வ் தீவான இந்த கஸின் தீவில் எண்ணற்ற இயற்கை வளங்களும், உயிரினங்களும் பாதுகாக்கப்படுகின்றன.
இந்த தீவில் சுமார் 400 மீற்றர் தூரத்திற்கு பவளப்பாறை ஒன்றும் அமைந்துள்ளது குறிப்பிடதக்கது.
Hawksbill turtles எனப்படும் ஆமைகள் அதிகளவில் இங்கு பாதுகாக்கப்படுகிறது. இந்த தீவிற்கு ஆண்டுதோறும், சுமார் 3,00,000 கடற்பறவைகள் வந்து கூடு அமைத்து வசித்து செல்கின்றன.
இந்த கருங்கல் தீவில் வேறுபட்ட மீன்களின் மக்கள் தொகையும் அதிகளவில் உள்ளது.
Curieuse Island
பச்சை மற்றும் சிவப்பு நிறத்தில் மனதை கொள்ளை கொள்ளும் அழகோடு காட்சியளிக்கும் இந்த தீவினை காண எண்ணற்ற சுற்றுலாவாசிகள் ஆண்டுதோறும் படையெடுக்கின்றனர்.
இந்த தீவில் கடல் தேசிய பூங்காவும் அமைந்துள்ளது. இந்த தீவுகளில் அமைந்துள்ள அடர்ந்த சதுப்பு நிலக் காடுகளின் இடையே பயணிக்கும் அனுபவம் மூச்சு முட்டும் அளவுக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
நவசக்தி விநாயகர் கோவில்
செஷல்ஸ் தீவுகளில் உள்ள ஒரே இந்து மத கோவில் இந்த நவசக்தி விநாயகர் கோவில் மட்டும் தான்.
இந்த கோவில் 1992ம் ஆண்டு அங்கு கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Black Pearl (Seychelles)
செஷல்ஸ் தீவுகளில் கிடைக்கும் அரிய வகை கருப்பு முத்துக்களால் ஆன நகைகள் மற்றும் ஆபரணங்கள் இங்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், கருப்பு முத்து எவ்வாறு தயார் செய்யப்படுகிறது என்பதும் இங்கு விளக்கப்படுகிறது.
Eden Art Gallery
ஈடன் தீவுகளில் உள்ள ஈடன் பிளாசாவில் அமைந்துள்ள இந்த கலைக்கூடம் செஷல்ஸ் தீவுகளிலேயே தற்போது மிகப்பெரியது ஆகும்.
பலவகையான சர்வதேச கலை பொருட்கள் இங்கு கண்காட்சியாக வைக்கப்படும்.
கலை ரசனைமிக்க சுற்றுலாவாசிகள் தவறவிடக்கூடாத முக்கியமான இடங்களில் இந்த கலைக்கூடம் முக்கிய இடத்தினை பெறுகிறது.
National Museum of History
1964ல் நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் செஷல்ஸ் தீவுகளின் பழமைவாய்ந்த வரைபடங்களும், வரலாற்று சிறப்புமிக்க பொருட்களும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
மேலும், செஷல்ஸ் தீவுகளின் கடந்த கால வரலாற்றை விளக்கும் விதமாக எண்ணற்ற விடயங்கள் அங்கு இடம்பெற்றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக