பீன்ஸ் கலந்த உணவை தினமும் சாப்பிடுபவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் கணிசமாக குறையும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
புகைபிடித்தல், புகையிலைப் பொருட்களை பயன்படுத்துதல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு வந்த நுரையீரல், காற்று மாசுபடுதலாலும் தற்போது அதிகம் பாதிக்கப்படுகிறது.
இதனால் நுரையீரல் புற்றுநோய், நெஞ்சுச் சளி, மூச்சுத்திணறல் மற்றும் பல்வேறு சுவாசக் கோளாறுகள் மனிதர்களைத் தாக்குகின்றன.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காண கார்ட்டின் தொழிநுட்ப பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஒரு ஆய்வை ஜப்பானில் உள்ள ஒரு மருத்துவமனை ஆய்வுக்கூடத்தில் மேற்கொண்டனர்.
உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய காய்கறிகள் குறித்த இந்த ஆய்வின் முடிவில், நுரையீரல் பாதிப்பை பீன்ஸ் கணிசமாகக் குறைத்தது தெரியவந்தது.
மேலும், நோய்ப் பாதிப்பு இருப்பவர்கள் பீன்சை சாப்பிடும் போது நல்ல நிவாரணம் கிடைப்பதையும் ஆய்வாளர்கள் உறுதிசெய்தனர்.
பச்சை பீன்சில் வைட்டமின் பி 6, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் மாங்கனீஸ் சத்துகள் அதிகம் உள்ளன. இது தவிர புரோட்டீன் அதிகம் உள்ளது.
அதனால் பீன்சை முழுவதுமாக வேகவைப்பதைக் காட்டிலும், அரைவேக்காட்டுடன் சாப்பிடுவது சிறந்தது.
பீன்சை வேகவைக்கும்போது அந்தத் தண்ணீரை கீழே ஊற்றாமல் சாம்பார் அல்லது சூப் தயாரிக்கப் பயன்படுத்துவதன் மூலம் பீன்சின் முழுச் சத்துகளையும் பெறமுடியும்.
தினமும் சுமார் 50 கிராம் பீன்சை உட்கொண்டால் நுரையீரல் தொடர்பான நோய்த் தாக்குதலில் இருந்து 90 சதவீதம் வரை மனிதனுக்கு நோய் ஏற்படாது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக