தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 6 ஏப்ரல், 2015

கர்ப்பிணிப் பெண்களுக்கு எச்சரிக்கை!

இரவு நேரத்தில் பணி புரியும் கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவு ஆபத்து அதிகம் இருப்பதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Warwick பல்கலைக்கழகம் , University Hospitals Coventry மற்றும் Warwickshire NHS Trust ஆகியவை இணைந்து மேற்கொண்ட ஆய்விலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது.
தூங்கும் கோலத்தில் ஏற்படும் மாற்றத்திற்கும் கருச்சிதைவுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், சீரான தூக்கத்தினால் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ஆய்வின் போது 70 கர்ப்பிணிகள் மீண்டும் மீண்டும் கருச்சிதைவுக்கு உள்ளானர்கள் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக