தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 15 ஏப்ரல், 2015

கார்ட்டூன்களை ரசிக்கும் குட்டீஸ்: வரவிருக்கும் ஆபத்துக்கள்

குழந்தைகள் கார்ட்டூன் படங்கள், கார்ட்டூன் சேனல்களை ரசித்து பார்ப்பார்கள்.
இவ்வாறு கார்ட்டூன் பார்ப்பது அவர்களுக்கு பிடித்தமான விடயமாக இருந்தாலும், இதனால் பல விளைவுகளை சந்திக்க கூடும்.
பள்ளியில் இருந்து வீடு திரும்பியவுடன், கொஞ்ச நேரம் பொழுதுபோக்கிற்காக பார்த்தால் அதில் தவறு கிடையாது, ஆனால் விடுமுறை கிடைத்தால் தங்களது நேரங்களை முழுக்க முழுக்க கார்ட்டூன் பார்ப்பதிலேயே செலவிடுவதை பெற்றோர்கள் கண்டிக்க வேண்டும்.
கார்ட்டூன் பார்க்கும் குழந்தைகளின் கற்பனைத்திறன் பாதிக்கப்படுகிறது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மொழி வளர்ச்சி
கார்ட்டூன்களை ரசித்து பார்க்கும் குழந்தைகள், அதில் என்ன மொழியை பேசுகிறார்களோ, அதே போன்று பேசுவதற்கு முயற்சி செய்கிறார்கள்.
இதன் காரணமாக அவர்கள் தவறான மொழி ஆளுமையை பின்பற்ற நேரிடுகிறது.
உடல் உழைப்பு
கார்ட்டூன் பார்க்க வேண்டும் என்ற ஆசையால் குழந்தைகள் வெளியில் விளையாட செல்லாமல், வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடப்பார்கள்.
இதனால் வெளியில் சென்று விளையாடுவதினால் கிடைக்கும் மகிழ்ச்சியை அனுபவிப்பதில்லை. மேலும் வீட்டில் அடங்கியிருப்பதால் அவர்களின் உடல்நலமும் துடிப்போடு இருப்பதில்லை.
மனநலம்
கார்ட்டூன் முன் அமர்ந்திருக்கும் குழந்தைகள், தங்களை சுற்றி என்ன நடந்தாலும் கண்டுகொள்வதில்லை, அதிலேயே மூழ்கிகிடப்பார்கள்.
இதன் விளைவாக தனிமை, அலட்சியபோக்கு போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர், மேலும் இவை அவர்களின் சமூகநடத்தையையும் பாதிக்கும்.
உணவு பழக்கங்கள்
தொலைக்காட்சி முன்னால் அமர்ந்து கொண்டு கார்ட்டூனை ரசித்து பார்க்கும்போது, உணவுகளை எடுத்துக்கொள்வதில் கவனம் செலுத்துவதில்லை.
அவ்வாறு உணவுகள் கையில் கிடைத்தாலும், கார்ட்டூனை பார்த்துக்கொண்டு அதனை சரியாக சாப்பிடாமல், ஏதோ சாப்பிட வேண்டுமே என்ற கட்டாயத்தில் சாப்பிடுவார்கள். இதனால் அவர்களின் உணவு பழக்கங்கள் மாறுவதோடு, உடல்நலமும் பாதிப்படைகிறது.
கோபம், வன்முறை
கார்ட்டூன் படங்களை பார்க்கும் போது, அதில் வரும் சண்டைகாட்சிகளை குழந்தைகள் செய்ய துணிகின்றனர், வகுப்பறையில் பிற மாணவர்களோடு, கார்ட்டூன் பட பாணியில் சண்டை புரிகின்றனர்.
மேலும், வன்முறை நிறைந்த கார்ட்டூன்கள், வீடியோ ஹேம்கள் இவற்றிலேயே அவர்களின் கவனம் செல்கிறது. இதனால் அவர்கள் சிறுவயதிலேயே மூர்க்க குணம் கொண்டவர்களாக மாறுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக