தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 24 ஏப்ரல், 2015

உங்களுக்கு தெரியாத ‘விஎல்சி’ பிளேயரின் அசத்தலான அம்சங்கள்


கணனியில் பொதுவாக வீடியோக்களை பார்க்க தேர்ந்தெடுக்கும் விஎல்சி (VLC) பிளேயரில் உள்ள சில முக்கியமான சிறப்பம்சங்கள் உள்ளன.
ஆனால் பலரும் வீடியோக்களை மட்டும் பார்ப்பதற்கு விஎல்சி பிளேயரை பயன்படுத்துகின்றனர். அதனால் இதில் உள்ள சில சிறப்பம்சங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
Video Effects
இதன் மூலம் வீடியோவின் வண்ணம், தேவையான பகுதிகளை தனியாக பிரிப்பது (cropping), மற்றும் உருப்பெருக்கம் போன்ற சிலவற்றை செய்ய முடியும்.
இதில் சாதராணமாக உள்ள வீடியோ Effect Option-ல் Contrast, Brightness, Gamma ஆகியவற்றை செய்து வீடியோவை மெருகேற்றலாம்.
Sharpness Effect வீடியோவிற்கு தெளிவான தன்மையை கொடுக்கிறது. இதில் உள்ள Sigma-வை Adjust செய்யும் போது வரும் மாற்றத்தை வீடியோவில் பார்க்கலாம். Transform வீடியோக்களை 360 டிகிரியில் மாற்றி அமைக்க உதவுகிறது.
Geometry
வீடியோ Effect Option-ல் Geometry tab-ல் உள்ள Video Magnification/Zoom வீடியோவில் உள்ள ஒவ்வொரு மூலை முடுக்குகளையும் In & Out செய்து பார்க்க உதவுகிறது.
Rotate option மூலம் வீடியோவை எந்தவொரு Angle வேண்டுமானாலும் மாற்றியமைக்கலாம். இதில் கொடுக்கப்பட்டுள்ள Puzzle Game விளையாடுபவர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும்.
Color fun
இதில் கொடுக்கப்பட்டுள்ள Color threshold மற்றும் Color Extraction மூலம் நமக்கு பிடித்த வண்ணங்களை வீடியோவுக்கு கொடுக்க முடியும்.
Vout/Overlay
இதில் வீடியோவை நமக்கு ஏற்றவாறு பல்வேறு Row மற்றும் Colums மூலமாக Panoramic View-க்கு மாற்ற முடியும். இது ஒரு சிறந்த Feature ஆகும். இதன் மூலம் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும்.
Adding Logo
இதன் மூலம் வீடியோவில் Left/ Right என தேவையான இடங்களில் Logo-வை பொருத்த முடியும்.
Record Webcam Video
இது ஒரு சிறப்பான Feature ஆகும். இதன் மூலம் Webcam Videoவை பதிவு செய்து வைத்துக் கொள்ள முடியும். வீடியோவை பதிவு செய்ய மீடியா மெனுவில் சென்று Capture Device-ல் Set செய்ய வேண்டும்.
Take Snapshots
இந்த Feature வீடியோவில் இருந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ள அனுமதிக்கிறது. இதன் மூலம் JPG, PNG புகைப்படங்களை பெற்றுக் கொள்ள முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக