தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 6 ஏப்ரல், 2015

சப்போட்டாவின் சத்தான நன்மைகள்

சப்போட்டா பழத்தில் பலதரப்பட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுவது மட்டுமின்றி மிகவும் சுவையாக இருப்பதால் அனைவருக்கும் பிடித்த பழமாய் திகழ்கின்றது.
சப்போட்டாவின் மற்றொரு பெயர் சிக்கு. ஆங்கிலத்தில் ‘சப்போட்டா’ (sapota) என்றும் ‘சப் போடில்லா’ (sapodilla) எனவும் கூறப்படுகிறது.
சப்போட்டேசியே (sapotceae) என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த இதன் தாவரவியல் பெயர் ‘அக்ரஸ் சப்போட்டா’ (Achars sapota). இதன் தூய தமிழ்ப்பெயர், ‘சீமை இலுப்பை’. இலுப்பைப் பழத்தைப் போல் உருவமுடையதால் இப்பெயர் வந்தது.  
சப்போட்டாவில் உள்ள குளுக்கோஸ் நம் உடலுக்கு அதிக ஆற்றலை வழங்குகிறது.மேலும் இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துக் காணப்படுகிறது.
சப்போட்டாவின் மகத்துவங்கள்
சப்போட்டாவில் அதிக அளவு வைட்டமின் ஏ- இருப்பதால் வயதான காலத்திலும் கூட, பார்வையை மேம்படுத்த உதவுகிறது.
சப்போட்டாவில் குளுக்கோஸ் நிறைந்திருப்பதால், அது உடலுக்கு உடனடி ஆற்றலை கொடுக்கிறது.
இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் இதர ஊட்டச்சத்துகள் புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது.
சப்போட்டாவில் உள்ள கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ்(Phosperous) போன்றவைகள் எலும்புகளை வலுவாக்குவதுடன், சிறுநீரக கற்களை வெளியேற்றவும் உதவுகிறது.
இப்பழத்திலிருக்கும் பொட்டாசியம்(Pottasium), இரும்புச்சத்து, போலேட்(Bolet), நியாசின்(Niyasen) மற்றும் பேண்டோதெனிக்(Fontothenic) அமிலம் போன்றவைகள் செரிமான அமைப்பு முறையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது.
சப்போட்டா விதைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய்யை கூந்தலுக்கு பயன்படுத்துவதால், தலைமுடி ஈரப்பதமாகவும் மற்றும் மென்மையாகவும் இருக்கும்.
இதில் கார்ப்போஹைட்ரேட்(Carbohydrate) மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் கர்ப்பிணிகளுக்கு உடல் பலவீனம், குமட்டல் மற்றும் மயக்கம் உள்ளிட்டவை குறைக்கிறது.
மேலும் இதில் இருக்கும் பாலிஃபீனாலிக் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள்(polyphenolic antioxidants), வைரஸ்(Virus) மற்றும் பக்டீரியாக்களை(Bacteria) எதிர்க்க வல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக