தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 8 ஏப்ரல், 2015

பூமிக்கு மேலே வாழும் வேற்றுக் கிரக உயிரினங்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

நாம் வாழும் இந்த பூமிக்கு மேலே 25 மைல் தொலைவில் 4 வகையான உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக இங்கிலாந்தைச் சேர்ந்த மில்டன் வெய்ன்ரைட் கூறியுள்ளார்.
ஷெப்பீல்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆன மில்டன் வெய்ன்ரைட் என்பவர் கடந்த 2013ம் ஆண்டு முதல் பெரிய ராட்சத பலூன் ஒன்றைப் பயன்படுத்தி அதன் மூலம் தூசுகளை சேகரித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இந்த ஆய்வின் மூலம், பூமிக்கு மேலே சுமார் 25 மைல் தொலைவில் அதாவது 40 கிலோமீட்டர் மேலே உயிரினங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அவர் இதுவரை 4 வகையான உயிரினங்களைக் கண்டறிந்துள்ளதாகவும், இவை வேற்று கிரக உயிரினங்கள் என்றும் இவற்றை டிஎன்ஏ சோதனை மூலம் தான் உறுதிப்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.
பூமியின் மேலே வேற்று உயிரினங்கள் உள்ளன என்று வாதிடும் இவர், தற்போது கண்டுபிடித்துள்ள 4 வகையான உயிரினங்களும், மிகப் பெரியவை என கூறியுள்ளார்.
மேலும், இந்த உயிரினங்கள் இங்கு பல காலமாக வாழ்ந்து வருவதாக நம்பும் இவர், அவற்றுக்கு கோஸ்ட் பார்ட்டிக்கிள்ஸ் (Ghost Particles) என்று பெயர் வைத்துள்ளார்.
இவரது கூற்றுக்களை இதுவரை யாரும் ஏற்காத நிலையில், தனது கண்டுபிடிப்புகளை நிரூபிக்க இவர் விஞ்ஞான சமுதாயத்திடம் போராடி வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக