வெயில் காலத்தில் குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் வெப்பத்தில் இருந்து உடலை காத்துக்கொள்ளலாம்.
ஆகவே கோடை காலத்திற்கான சில டிப்ஸ் இதோ,
1. இளநீர் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். காலையில் வெறும் வயிற்றில் இளநீரை குடிப்பது மிகவும் நல்லது.
2. வெண்பூசணியும், பாகற்காயும் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது கோடைகாலத்தில் இதம் அளிக்கும்.
3. டூவீலரில் செல்பவர்கள் கண்டிப்பாக ஸ்கார்ஃப் அல்லது துப்பட்டாவால் முழுக்கூந்தலையும் மூடிச் செல்லவும்.
4. உருளைக்கிழங்கை அரைத்து, அந்தத் தண்ணீரை மட்டும் வடிகட்டி முகத்தில் தடவி அரைமணி நேரம் கழித்துக் கழுவினால் வெம்மை முகத்தைத் தாக்காமல் பளிச்சிடும்.
5. எல்லாவற்றிற்கும் மேலாக காலையில் வழக்கத்தைவிட விரைவாக எழுந்துவிடுங்கள்.
6. உங்களுடைய கைப்பையில் எப்போதும் தொப்பி, குடை, சன் க்ளாஸ் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
7. தினமும் ஏதேனும் ஒரு கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது உடல் சூட்டை தணிக்கும்.
8. இரவே வெந்தயத்தை ஊறவைத்து, மறுநாள் காலை வழவழப்பாக மிக்ஸியில் அரைத்து விரல் நுனிகளால் தலையில் மசாஜ் செய்து அரைமணி நேரம் கழித்து குளித்தால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும்.
9. உடல் சூட்டைத் அதிகரிக்கக்கூடிய புளிக்குப் பதிலாக தக்காளி, எலுமிச்சைச்சாறு சேர்க்கலாம். மிளகாய்க்குப் பதிலாக மிளகும், சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் அல்லது தேனும் சேர்த்து சாப்பிடலாம்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக