பசிக்காகவும், ருசிக்காகவும் உணவுகளை உண்பவர்கள் மத்தியில் ஆரோக்கியத்திற்காக உணவுகளை உண்பவர்கள் குறைந்த அளவிலேயே உள்ளனர்.
ஆனால் நீங்கள் சாப்பிடும் உணவுகளால் ஆரோக்கியம் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் அழகும் கிடைக்கிறது.
நாம் எடுத்துக்கொள்ளும் உணவைப் பொறுத்துதான் உடலும், அழகும் உள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள்.
அந்த வகையில் ஆரோக்கியத்துடன், அழகும் தரும் உணவுகள் உங்களுக்காக,
முட்டை
புரதம், வைட்டமின் மற்றும் கனிம பொருட்கள் வளமையாக நிறைந்துள்ள முட்டை, உங்கள் செறிவூட்டத்தை மேம்படுத்துகிறது. ஆரோக்கியமான எடையை பராமரித்து, மூளை வளர்ச்சிக்கு உதவி புரிகிறது. மேலும் கண் பார்வையை வலிமையாக்குவதோடு மட்டுமல்லாமல், மார்பக புற்றுநோயை தடுக்க உதவுகிறது.
ஸ்ட்ராபெர்ரி
சுவைமிக்க ஸ்ட்ராபெர்ரி சுவையாக இருக்கும். ஆண்டி-ஆக்சிடன்ட் அடங்கியுள்ள இந்த பழம் இதய நன்மைகளை அளித்து, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் பொட்டாசியமும், நார்ச்சத்தும் வளமையாக இருக்கும். இரத்தக் கொதிப்பை குறைத்து, எலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, செரிமானப் பாதையை ஆரோக்கியமாக வைத்து, புற்று நோய் வளர்ச்சியை தடுக்கும்.
பூசணிக்காய்
பூசணிக்காயின் விதைகள் மற்றும் தசை என இரண்டுமே பல பயன்களை அளிக்கிறது.
இதிலும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள், வைட்டமின் ஏ, சி, கே மற்றும் ஈ, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இரும்பு வளமையாக உள்ளது. மன அழுத்தம் போன்றவைகளை குணப்படுத்தவும் புற்று நோயை தவிர்க்கவும் பூசணிக்காயின் விதைகள் உதவுகிறது.
ஆரஞ்சு
ஆரஞ்சு என்றாலே வைட்டமின் சி வளமையாக உள்ள ஒரு பழம்.
ஆனால் ஆஸ்துமா, சிறுநீரக கற்கள், இரத்தக்கொதிப்பு மற்றும் கீல்வாதம் போன்றவைகளை குணப்படுத்துகிறது. கொலஸ்ட்ராலை குறைக்கவும் சர்க்கரை நோயை தடுக்கவும் கூட இது உதவுகிறது.
ப்ராக்கோலி
ஊட்டச்சத்து நிறைந்துள்ள இந்த உணவு, இரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், கண்புரை, வயிறு மற்றும் குடல் புற்று நோய், கீல்வாதம், இதய நோய்கள், அல்சைமர், ட்யூமர், வயதாவதனால் ஏற்படும் பிரச்சனைகள் போன்றவைகளை கட்டுப்படுத்தி தடுக்க இது உதவுகிறது.
கீரை
ஊட்டச்சத்து நிறைந்துள்ள உணவான கீரையில், இரும்புச்சத்து மட்டுமல்லாமல், வைட்டமின்கள், கனிமங்கள் போன்றவைகளும் அடங்கியுள்ளது.
இது உங்கள் இதயத்தை பாதுகாத்து,குடலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மூளையை இளமையாகவும், முனைப்புடனும் வைத்திருக்கும்.
தக்காளி
லைசோபீன் என்ற ஆன்டி-ஆக்சிடண்ட் இருப்பதால் தான் தக்காளி சிகப்பு நிறத்தில் ஜொலிக்கிறது. இது இயற்கையாகவே நம் உடலில் இருப்பதில்லை.
அதனால் உணவுகளில் இருந்து தான் நம் உடலுக்கு இதனை எடுத்துக் கொள்ள வேண்டும். புற்று நோய் மற்றும் இதய நோய்களை தடுக்கவும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் இது உதவுகிறது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக