தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 21 ஏப்ரல், 2015

பெண்களுக்கு கட்டுப்பாடு உள்ளபோதே ஆண்களின் வலைக்குள் ........

எதற்காக பெண்களுக்கு பெரியார் சுதந்திரம் கொடுக்க அவசரப்பட்டார் என்று இப்போதாவது புரிகின்றதா?

பெண்களும் ஆண்களைப்போல குடித்து புகைத்து அழிந்தால் கற்பக்கோளாறு ஏற்பட்டால் யாருமே அழிக்காமல் தமிழினம் அழிந்துவிடும் அல்லவா?

அதை இன்று பிரான்ஸ் தமிழச்சி தொடக்கம் இந்திய சீமான் வரை ஊக்குவிக்கும் காரணம் தமிழரில் மட்டுமே உள்ள கோபமா?

பெண்களை அழிக்கபெண்கள் மட்டுமல்ல ஆண்களும் காட்டும் ஆர்வமா?

பெண் குழந்தை பெற முடியாது போனால் இனம் பெருக்கமில்லை,இனம் பெருகாவிட்டால் இன்னொரு இனம் நம்மை அழிக்க அவசியமே இல்லை!

அன்று நாமிருவர் நமக்கிருவர் வந்ததும் வளர்ந்ததும் தமிழரை அழிக்கவே,அதை தமிழரே ஊக்குவித்தது அறியாமையா இனத்துரோகமா?

இன்றும் பெண் சுதந்திரமென்ற பெயரில் இனவழிப்பு செய்வோர் யார்??


சென்னை நட்சத்திர ஹொட்டல்களில் உள்ள பார்களில் சமீப காலமாக இளம் பெண்களின் வருகை அதிகளவில் பெருகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் இளைஞர்கள் பலரும் வார இறுதி நாட்களில் கொண்டாட்டம் என்ற பெயரில், நட்சத்திர ஹொட்டல்களில் குடித்து கும்மாளமிடுவது தொடர்கதை தான்.
இந்நிலையில் தற்போது பார்களில் குவியும் ஆண்களுக்கு நிகராக இளம்பெண்களும் குவிய தொடங்கியுள்ளனர்.
இப்படிப்பட்ட பார்களில் தான், இளம் பெண்கள் ஜீன்ஸ் பேண்ட், டி.சர்ட் அணிந்தபடியே வந்து ஆண் நண்பர்களுடன் மது அருந்துகிறார்கள்.
ஒயின், வோட்கா என விதவிதமான மது வகைகளை அருந்தும் இளம் பெண்கள், நள்ளிரவில் பாரை விட்டு வெளியில் வரும்போது, ஆண் நண்பர்களின் தோளில் தொற்றிக்கொண்டே செல்வதும் இயல்பாகிவிட்டது.
சமீபத்தில் கிண்டியில் உள்ள நட்சத்திர ஹொட்டல் ஒன்றிற்கு வசதி படைத்த வாலிபர் ஒருவர், 5 இளம்பெண்களை அழைத்துக்கொண்டு மது அருந்தச்சென்றுள்ளார்.
அந்த பெண்கள் அனைவருமே 21 வயது நிரம்பாதவர்கள் என்பதால் அதிர்ச்சி அடைந்த ஹொட்டல் நிர்வாகம் அந்த வாலிபரையும், இளம் பெண்களையும் உள்ளே அனுமதிக்கவில்லை.
மேலும், 5 பெண்களுக்கும் வயதுச் சான்றிதழ்களை கொண்டு வந்தால் பாருக்குள் செல்ல அனுமதிக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.
இதனால் அவமானத்துக்குள்ளான அந்த வாலிபர், தனது நண்பர்கள் சிலரை ஹொட்டலுக்கு வரவழைத்து தகராறில் ஈடுபட்டதோடு காவலாளிகள் சிலரையும் தாக்கியுள்ளனர்.
பின்னர் இதுபற்றி ஹொட்டல் நிர்வாகம் சார்பில் கிண்டி பொலிசில் புகார் செய்யப்பட்டதை அடுத்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சமீபத்தில் 10–ம் வகுப்பு தேர்வு முடிந்த மகிழ்ச்சியில் பள்ளி மாணவிகள் சிலர் சீருடையுடன் பீர் குடித்தபடியே போஸ் கொடுக்கும் படங்கள் வாட்ஸ்-அப்பில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக