தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

நீங்கள் ஸ்மார்ட் போன் அடிமைகளா? உடனே தெரிஞ்சுக்கோங்க

நீங்கள் ஸ்மார்ட் போன் அடிமைகள் என்றால் அதை தெரிந்துக் கொள்ள அருமையான வழிகள் உள்ளது.தற்போது உள்ள காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் நமது அன்றாட வாழ்க்கையோடு ஒன்றிணைந்து விட்டது. அதனால் நாமும் அதற்கு அடிமைகளாகி விடும் நிலைமையும் வந்து விட்டது.
சிலருக்கு ஸ்மார்ட்போனை பார்க்கவிட்டால் கையும் ஓடாது, காலும் ஓடாது. இந்நிலையில் நாம் ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகி விட்டோமா என்பதை கண்டறிய சில வழிகளை ஒரு இணையதளம் வரிசைப்படுத்தியுள்ளது.
1) 60 நொடிக்கு ஒருமுறை ஸ்மார்ட் போனை பார்ப்பது.
2) டெம்பிள் ரன் (Temple run) அல்லது கேண்டி கிரஷ் (Candy crush) போன்ற விளையாட்டுகளை அடிக்கடி விளையாடுவது.
3) வாட்ஸ் அப் (Whatsapp) போன்ற சேவைகளில் தீவிரம் காட்டுவது.
4) இயர்போன்களைப் பயன்படுத்துவது.
5) செல்ஃபிக்களை எடுப்பதில் தணியாத தாகம் கொண்டிருப்பது.
இந்த ஐந்து பழக்கங்கள் இருந்தால் அவர்கள் ஸ்மார்ட் போன் அடிமை என்று சொல்லலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இவை ஆய்வின் மூலம் எடுக்கப்பட்டவை இல்லை என்றாலும், இந்த பழக்கங்கள் அதிகம் இருந்தால் அலட்சியப்படுத்தாமல் உடனே மாற்றிக் கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக