தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 25 ஏப்ரல், 2015

பெண்களை குறிவைக்கும் நோய்

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பல்வேறு விதமான நோய்களுக்கு ஆளாகிறார்கள், அதில் ஒன்றுதான் Polycystic Ovary Syndrome.Polycystic Ovary Syndrome என்பது ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றத்தால் பெண்களின் கருப்பையில் ஏற்படும் கட்டி ஆகும்.
ஹார்மோன்களின் சமநிலையின்மையால், மாதவிடாய் பிரச்சனைகள், கருத்தரித்தல் போன்ற பிரச்சனைகளை பெண்கள் சந்திக்கின்றனர்.
நமது உடலில் சுரக்கும் ஹார்மோன்கள், பல வேதியல் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. மேலும் உடல் வளர்ச்சி, ஆற்றல் உற்பத்தி போன்ற பணிகளை ஹார்மோன்கள் செய்கின்றன.
ஆனால், ஒழுங்கற்ற உடல் பராமரிப்பு, ஆரோக்கியமான உணவுகள் எடுத்துக்கொள்ளாமை போன்ற காரணங்களால் இந்த ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படுகின்றன.
இந்த ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படும்போது, பெண்களின் உடலமைப்பில் மாற்றம் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு விதமான நோய்களுக்கும் ஆளாகிறார்கள்.
இதயநோய்கள், சர்க்கரை நோய் மற்றும் சில பெண்களுக்கு கருப்பையில் நீர்க்கட்டி ஏற்படுகின்றன.
அறிகுறிகள்
* உடல் பருமனாகிக் கொண்டுபோவது.
* மாதவிலக்குப் பிரச்னை: மூன்று, நான்கு மாதங்கள் மாதவிலக்கு ஏற்படாமல் தள்ளிப்போவது.
* பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு வருவது.
* உதடுகளுக்கு மேல், காது ஓரத்தில் அல்லது முகவாய், வயிற்றின் அடிப்பகுதி போன்ற இடங்களில் ரோமங்கள் முளைப்பது.
* கல்யாணமான பெண்களுக்கு குழந்தைப்பேறு தள்ளிக்கொண்டே போவது.
* முகத்தில் பருக்கள் மற்றும் எண்ணெய் சருமமாக மாறுதல்.
* அதிகமான இன்சுலின் சுரப்பதன் காரணமாக உடல் பருமன் மற்றும் தோல்களில் ஒரு வித அடையாளங்கள் ஏற்படுகின்றன.
* ஆண்களின் ஹார்மோன்கள் என்று அழைக்கப்படும் Androgens சுரத்தல்.
* சிறுநீர் கழித்தலில் பிரச்சனை.
* தூங்கும்போது சுவாசித்தலில் பிரச்சனை.
காரணம் என்ன?
ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் பிரச்சனைகளாலும், மரபணு மூலமாகவும் இப்பிரச்சனை ஏற்படுகிறது.
பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் கூறும் காரணம் என்னவெனில், இன்சுலின் ஹார்மோன் அதிகமாக சுரப்பதால் பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகின்றன.
அதாவது, உடல்களில் சர்க்கரை சத்து, ஸ்டார்ச்சத்து மற்றும் இதர உணவுகளின் மூலமாக உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கும் பணிகளை செய்யும் இன்சுலின் ஹார்மோன் அதிகமாக சுரப்பதன் காரணமாக Androgen உற்பத்தி அதிகரிக்கின்றன.
மேலும் ஆண்களின் ஹார்மோன்களான Androgens அதிகமாக சுரக்கும் போது, கருமுட்டை வெளியிடுதல் மற்றும் கரு முட்டைகளின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
இதன் விளைவாக கருத்தரித்தல், கருப்பையில் கட்டி போன்றவை ஏற்படுகின்றன.
சிகிச்சை முறைகள்
பெரும்பாலும் 15 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்ட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
திருமணமாகாத பெண்களுக்கு அவர்கள் டீன்ஏஜ் கடந்த பின்பும், Polycystic Ovary Syndrome பிரச்சனை இருப்பின் ஆறு அல்லது ஒன்பது மாதம் போன்று குறுகிய காலத்துக்கு மருத்துவரின் ஆலோசனைப் பேரில், தகுந்த ஹார்மோன்கள் அளித்து குணப்படுத்தலாம்.
கல்யாணம் ஆன பெண்களாக இருப்பின் மருத்துவரின் ஆலோசனைப்படி தேவையான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இல்லையெனில் 40 வயதுக்கு மேல் சென்றால் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
மேலும், முறையான உடற்பயிற்சி, உடல் எடையை சரியான முறையில் பராமரித்தல்.
முழுதானியங்கள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை அதிகளவில் உட்கொள்ள வேண்டும்.
தடுப்பு முறைகள்
Polycystic Ovary Syndrome – ஐ தடுக்க முடியாது, ஆனால் முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் சரியான சிகிச்சை முறைகள் மூலம் மலட்டுத்தன்மை, உடல்பருமன், இதய நோய்கள், நீரிழிவு நோய் போன்றவற்றில் இருந்து காத்துக்கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக