7 அடி நீளம் கூந்தலால் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த பெண்மணி (வீடியோ இணைப்பு)
அலகாபாத்தை சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா என்ற பெண், நீண்ட கூந்தலுக்காக லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா (37), தனது உயரத்தை விட மூன்று அங்குலம் நீண்ட கூந்தலை வளர்த்ததன் மூலம், இந்தியாவின் நீண்ட கூந்தல் கொண்ட பெண் என்ற சாதனையை படைத்துள்ளார்.
தற்போது 7 அடி நீளம் கொண்ட கூந்தல் உடையவராக உள்ள ஸ்மிதா, 6 அடி நீளம் இருந்தபோதே லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துவிட்டார்.
ஸ்மிதாவின் முயற்சிக்கு அவரது குடும்பத்தினரும் ஆதரவளித்து வருகின்றனர்.
தனது சாதனை குறித்து ஸ்மிதா கூறுகையில், எனது 7 அடி கூந்தலுக்காக பல விருதுகளை வென்றுள்ளதுடன், லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளேன்.
கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க திட்டமிட்டுள்ளேன். வெளியில் செல்லும்போது பலரும் எனக்கு மரியாதை தருகின்றனர்.
அவர்கள் என்னுடன் பேச ஆர்வப்படுவதுடன், பெண்கள் மற்றும் குழந்தைகள் என்னுடைய கூந்தலின் நீளம் உண்மையானது தானா என்று இழுத்து பார்க்கின்றனர்.
மேலும், கூந்தல் உண்மை தான் என்று தெரிந்தவுடன் நீங்கள் அதிஷ்டசாலி என்று கூறிவிட்டு செல்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக