சைவ உணவுகளிலேயே புரோட்டீன் அதிகளவில் நிறைந்திருப்பது பருப்பு வகைகளில் தான்.
மேலும் பருப்புக்களில் புரோட்டீன் மற்றுமின்றி, வேறு சில ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன.
அந்த வகையில் இதனை உணவுகளில் அதிகம் சேர்த்து வந்தால், உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
அதுமட்டுமல்லாமல், பருப்புக்களிலேயே பல வகைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சத்துக்கள் நிறைந்துள்ளன.
இதனை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால், புற்றுநோய், இதய நோய், மாரடைப்பு, பக்கவாதம், டைப்-2 நீரிழிவு போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.
இப்போது பருப்புக்களின் கைகளையும் அதில் உள்ள சத்துக்களையும் பார்ப்போம்.
துவரம் பருப்பு
துவரம் பருப்பில் அதிக அளவில் புரோட்டீன், போலிக் ஆசிட்(Folic Acid) மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
மேலும் இதில் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், குடலியக்கம் சீராக இருந்து, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கிறது.
பாசிப்பருப்பு
பாசிப்பருப்பில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மேலும் உடல் எடையை குறைப்பதற்கு உதவியாகவும் இருக்கும்.
அதுமட்டுமல்லாமல், அதிகப்படியான புரோட்டின் மற்றும் நார்ச்சத்தால், இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும்.
கொண்டைக்கடலை
கொண்டைக்கடலையில் போலிக் ஆசிட், மாங்கனீசு(, இரும்புச்சத்து, காப்பர், மக்னீசியம் போன்றவை அதிக அளவில் இருக்கிறது. ஆகவே கொலஸ்ட்ரால் குறைவதோடு, இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறையும். மேலும் இது உடல் சக்தியையும் அதிகரிக்கும்.
மைசூர் பருப்பு
மைசூர் பருப்பின் சிறப்பு என்னவென்றால், அதில் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், அது உடலில் உள்ள பித்தக்கற்களை வெளியேற்றிவிடும்.
மேலும் ப்ளேவோனாய்ட்ஸ் அதிகம் கொண்டதால், புற்றுநோய் தாக்கத்தில் இருந்தும் காப்பாற்றும். அதுமட்டுமின்றி, இது உடலில் இரத்தத்தை அனைத்து உறுப்புகளுக்கும் சீராக கொண்டு செல்லும்.
சுண்டல்
கொண்டைக்கடலையில் ஒரு வகை தான் இந்த சுண்டல். இதனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
புரோட்டீன், கார்போஹைட்ரோட், வைட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம், போலேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால், அது கருப்பைக் குழாயில் பிரச்சனை ஏற்படுவதையும், இரத்த சோகை பிரச்சனையையும் தடுக்கும்.
கடலைப் பருப்பு
கடலைப்பருப்பில் போலிக் ஆசிட், மாங்கனீசு, இரும்புச்சத்து, காப்பர் மற்றும் மக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளது. இதில் அதிகமாக புரோட்டீன் நிறைந்திருப்பதால், இதனை அதிகம் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
குறிப்பாக இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு மற்றும் கரோனரி இதய நோய் போன்றவை ஏற்படுவது குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உளுத்தம் பருப்பு
இட்லிக்கும், தாளிப்பதற்கு பயன்படுத்தும் உளுத்தம் பருப்பில், கொழுப்பு குறைவாகவும், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் அடங்கியுள்ளது.
மேலும் இதில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. இறைச்சிக்கு பதிலாக ஒரு சிறந்த உணவுப் பொருள் என்றும் சொல்லலாம்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக