அரியானா மாநிலத்தில் ஹிசார் மாவட்டத்தில் உள்ள ராகிகரி கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த எலும்பு கூடுகள், 5000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களுடையது என கூறப்படுகிறது.
அரியானா தொல்பொருள் ஆராய்ச்சித் துறை, தென் கொரியாவின் சியோல் தேசிய பல்கலைகழகம் மற்றும் புனேவில் உள்ள டெக்கான் கல்லூரியுடன் இணைந்து 2012-ம் ஆண்டிலிருந்து நடத்திய அகழ்வாராய்ச்சியில் இந்த எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
5 அடி 6 அங்குலம் உயரம் கொண்ட, 50 வயதுடைய 2 ஆண் எலும்புக்கூடுகள், 5 அடி 4 அங்குலம் கொண்ட ஒரு பெண், மற்றும் ஒரு 10 வயது குழந்தை உட்பட மீட்கப்பட்ட இந்த எலும்புக்கூடுகள் அனைத்தும் டி.என்.ஏ சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், எலும்புக்கூடுகள் தவிர்த்து உணவு தானியங்கள், வளையல்கள், பொம்மைகள், சக்கரங்கள், மண்பாண்டங்கள் மற்றும் பல்வேறு அளவுகளில் கவண் எறிய பயன்படும் பந்துகள் உட்பட புலிச்சின்னம் பொறித்த இலச்சினையும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக