தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 20 ஏப்ரல், 2015

செல்போன் தொலைந்து விட்டதா? கவலைப்படாதீர்கள் இனி கூகுளில் போனை தேடிக்கண்டுபிடிக்கலாம்


ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்கள் தொலைந்தால், இனி கூகுள் தேடுதளத்திலேயே அவை எங்கிருக்கிறது என்பதை தேடி கண்டுபிடிக்க முடியும். 

கூகுள் நிறுவனம் மிகத்திறமை வாய்ந்த தேடுபொறி தளத்துடன், தொழில்நுட்ப உலகில் களம் இறங்கியது. அதன்பிறகு படங்கள், வரைபடம், செய்திகள், மொழி பெயர்ப்பு என எண்ணற்ற வசதிகளை தந்து இணைய உலகில் ஜாம்பவானாக விளங்கி வருகிறது. தற்போது ஸ்மார்ட் போன்கள் தொலைந்து போனால் கூகுளில் தேடி கண்டுபிடிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

இதற்கென பிரத்யேகமாக ஒரு அப்ளிகேசன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதை உங்கள் செல்போனில் நிறுவிக்கொண்டு, அதில் கூகுள் கணக்கின் வழியே உங்கள் ஸ்மார்ட்போன், டேப்லட், கணினி ஆகியவற்றின் தகவல்களை பதிவு செய்து வைக்க வேண்டும். பின்னர் எப்போதாவது போன், கணினியை வைத்த இடம் மறந்துபோனாலோ அல்லது தொலைந்து போனாலோ அவற்றை எளிதாக தேடி கண்டுபிடிக்கலாம். 

இதற்கு இருந்த இடத்தில் இருந்துகொண்டே வழக்கமாக கூகுள் தேடல் பக்கத்தில் ‘பைன்ட மை போன்’ (Find my phone)  என்று தட்டச்சு செய்தால் போதும், உடனே ஒரு வரைபட திரை உருவாகும். அதில் தொலைந்த ஆண்ட்ராய்டு செல்போனின் தகவலை குறிப்பிட்டால் அது எங்கிருக்கிறது என்பது பற்றிய தகவல்கள் சில வினாடிகளில் திரையில் காட்டப்படும். நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து எவ்வளவு தொலைவில் உங்கள் போன் இருக்கிறது என்பது காட்டப்பட்டு விடும். ஒருவேளை உங்கள் பொபைல் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்தால் அதில் இருக்கும் ‘ரிங்’ என்ற வசதியை பயன்படுத்தி, உங்கள் மொபைலை செயல்படாமல் பூட்டி வைக்க முடியும். தேவைப்பட்டால் போனில் உள்ள தகவல்களை அழிக்கவும் செய்யலாம். 

ஆப்பிள் ஐபோன் ஏற்கனவே இதுபோன்ற சேவையை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

http://www.maalaimalar.com/2015/04/20101817/Dont-worry-if-Lost-your-cellph.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக