மலை வாசஸ்தலமான ஏற்காட்டில் கான்பதற்கினிய இயற்கை காட்சிகள் மற்றும் இதமான வானிலை நிலவி வருவதால் சுற்றுலாப்பயணிகள் இங்கு குவிகின்றனர்.
ஏற்காடு கடல் மட்டத்தில் இருந்து 1515 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு எப்போதுமே 30 டிகிரி செல்சியசுக்கு மேலும், 13 டிகிரி செல்சியசுக்குக் கீழும் வெப்பநிலை மாறியதில்லை என்பதுஇதன் சிறப்பம்சமாகும்.
இங்கு வாழை, பலா மற்றும் ஆரஞ்சு பழங்களின் விளைச்சல் அமோகமாக இருக்கிறது. ஏற்காட்டில் கண்களுக்கு விருந்தளிக்கும் பல இடங்கள் உள்ளன. படகு வசதியுடன் கூடிய ஏரி, லேடிஸ் ஸீட், கிள்ளியூர் நீர்வீழ்ச்சி, பகோடா பாயிண்ட், சேர்வராயன் கோயில் என சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன.
பார்க்க வேண்டிய இடங்கள்
Emerald Lake
ஏற்காட்டில் அமைந்துள்ள எமரால்டு ஏரியும், அதில் படகுச் சவாரியும், ஏற்காடு வரும் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும்.
ஏரியைச் சுற்றி அழகான தோட்டமும், ஓங்கி வளர்ந்த மரங்களும் காட்சிகளும் இருப்பதால், இயற்கை ரசிகர்களுக்கு இந்த இடம் நிச்சயம் பிடிக்கும். இந்த ஏரிக்கு அருகே அண்ணா பூங்கா என்ற அழகான பூங்காவும் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மலைகளில் தானாக உருவான ஏரிகளில் எமரால்டு ஏரியும் ஒன்றாகும். இந்த ஏரியின் நடுவில் ஓர் நீருற்றும் அமைந்துள்ளது ஒரு தனிச்சிறப்பாகும்.
லேடீஸ் சீட்
சேலம் மாநகரின் ஒட்டுமொத்த அழகையும் ஒரே இடத்தில் இருந்து ரசிக்க வேண்டுமானால் இந்த இடத்திற்கு கண்டிப்பாக வர வேண்டும்.
இரவு நேரத்தில் இங்கு வந்தால், சேலம் மாநகரமே விண்வெளியில் நட்சத்திரக் கூட்டங்களுக்கு இடையே மிதப்பது போல் தோன்றும்.
இதேப்போல பகோடா பாயிண்ட் என்ற இடமும் பாதுகாப்பாக சுற்றுலாப் பயணிகள் சேலம் நகரைப் பார்க்க அமைக்கப்பட்ட ஒரு இடமாக உள்ளது.
கிள்ளியூர் நீர்வீழ்ச்சி
சுமார் 3000 அடி உயர நீர்வீழ்ச்சி ஏற்காட்டின் சிறப்புக்கு மேலும் சிறப்பு சேர்த்து வருகிறது.
இந்த நீர்வீழ்ச்சியில் குளித்தால் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும். இந்த நீர்வீழ்ச்சியைச் சுற்றிலும் ஏராளமான இயற்கைக் காட்சிகள் நிறைந்து காணப்படுகிறது.
சேர்வராயன் கோயில்
சேர்வராயன் மலை உச்சியில் சேர்வராயன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் நடைபெறும் திருவிழாவில் ஏராளமான பக்தர்களும், சுற்றுலா வரும் பயணிகளும் பங்கேற்பர்.
இங்கு இருக்கும் கடவுளான சேர்வராயரும், காவேரி அம்மனும் சேர்வராயன் மலையையும், காவேரி நதியையும் குறிக்கின்றனர்.
ஏப்ரல், மே மாதங்களில் இங்கு மலர்க்கண்காட்சி நடைபெறும்.
Bear's Cave
தனியாருக்கு சொந்தமான இந்த குகையை பார்ப்பதற்கு சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும், இந்த குகையின் நடுவில் ஒரு பெரிய பாறை உள்ளது.
இந்த குகை கரடிகள் தங்கும் இடமாக கருதப்படுகிறது, தரை மட்டத்தில் இருந்து சுமார் 7 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த குகையில் சேர்வராயின் கோயிலுக்கு செல்லும் பாதை உண்டு என்று கூறப்படுகிறது.
மேலும், போரின்போது திப்புசுல்தான் பதுங்கி கொள்வதற்காக இந்த குகை பயன்படுத்தப்பட்டது என்று கூறப்படுகிறது.
Pagoda Point
பகோடா பாயிண்ட் அல்லது பிரமிடு என்று இது அழைக்கப்படுகிறது. ஏனெனில் நான்கு கற்கள் இணைந்து பிரமிடு போன்று காட்சியளிப்பதால் இதற்கு பிரமிடு என்று பெயர்.
தற்போது இந்த கற்களுக்கு இடையே ராமல் கோயில் அமைந்துள்ளது.
இந்த பக்கோடா மலையில் இருந்து அதிகாலை மற்றும் மாலைப்பொழுதில் பார்த்தால் சேலம் நகரம் அழகாக காட்சியளிக்கும், இந்த மலைப்பகுதியில் நாம் நேரங்களை செலவிட்டால் மனதுக்கும் உடலுக்கு ஒருவிதமான புத்துணர்ச்சி கிடைக்கும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக