மாரடைப்பு வந்த போதிலும் தெய்வாதீனமாக உயிர்பிழைத்தவர்கள் நாள் ஒன்றிற்கு தொடர்ச்சியாக 30 நிமிடங்களுக்கு மேல் உடற்பயிற்சி செய்யக்கூடாது என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வினை Life Sciences Division of the Lawrence Berkeley National Laboratory இல் பணி புரியும் Dr Paul Williams மற்றும் அமெரிக்காவின் Hartford வைத்தியசாலையில் பணி புரியும் இதய சத்திரசிகிச்சை நிபுணரான Dr Paul Thompson ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 10 வருடங்களாக மாரடைப்பு வந்து உயிர் பிழைத்த 2400 பேரை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் ஒரே நாளில் 4.4 மைல்கள் தூரத்திற்கு மேல் ஓடுதல் அல்லது 6.6 மைல்களுக்கு மேல் நடத்தல் உயிர் ஆபத்தினை மீண்டும் விளைவிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக