இலங்கையில் மட்டுமே வாழும், அரிதான, அழிந்து வரும் நிலையிலுள்ள சிறுத்தையின் இரண்டு குட்டிகள் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் மீட்கப்பட்டுள்ளன. அனைத்துலக அளவில் அழிந்து வரும் இனங்களை அடையாளப்படுத்தும் சிவப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ள சிறுத்தை இனத்தைச் சேர்ந்த குட்டிகளே இவையாகும்.
.
புதுக்குடியிருப்பு பகுதியில் காட்டுக்கு வேட்டைக்குச் சென்ற சிலர் சிறுத்தைக் குட்டிகள் இரண்டைப் பிடித்து வந்து விற்பனை செய்ய முற்பட்டிருந்தனர்.
இதுபற்றிய இரகசியத் தகவல் கிடைத்ததையடுத்து, அதிகாரிகளுடன் அங்கு விரைந்த வடமாகாண விவசாயத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அந்தக் குட்டிகளை மீட்டு, அனுராதபுர கால்நடை மருத்துவ அதிகாரி சந்தன ஜெயசிங்கவிடம் நேற்று யாழ்ப்பாணத்தில் ஒப்படைத்தார்.

இந்தச் சிறுத்தைக் குட்டிகள் மூன்று வாரங்கள் வயது கொண்டவை என்றும், அழிந்து வரும் பட்டியலில் இருக்கும் இந்தச் சிறுத்தை வகையை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியிருப்பதாகவும் அமைச்சர் ஐங்கரநேசன் கூறினார்.

http://www.jvpnews.com/srilanka/79392.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக