இணையம் இல்லை என்றால் இந்த உலகமே இல்லை என்ற நிலைக்கு வந்துவிட்டோம் என்று தான் சொல்ல வேண்டும்.
நம் வாழ்க்கையோடு இணைந்துவிட்ட இணையத்தின் இன்றைய நிலைக்குப் பலர் காரணமாக இருந்துள்ளனர்.
1. மார்க் ஆண்ட்ரீசன்(Marc Andreesen)
Mosaic என்னும் பிரவுசரை உருவாக்கியவர். முதல் நிலையில், இணையத்தினை மக்களிடம் பரவலாகக் கொண்டு சென்றதில், இந்த பிரவுசருக்கு இடம் உண்டு.
பின்னால் நெட்ஸ்கேப் நேவிகேட்டர் என்ற இணைய பிரவுசரை உருவாக்குவதில் இவர் அதிகம் துணை புரிந்தார்.
1990ஆம் ஆண்டு காலகட்டத்தில் இணையப் பயன்பாடு தொடர்ந்து உயர்ந்த போது, இந்த பிரவுசரின் இடமும் முதல் இடத்தில் இருந்தது.
2. விண்ட் செர்ப்(Vint Cerf)
இணையத்தை உருவாக்கிய தந்தை என, Bob Kahnஎன்பவரோடு சேர்த்து அழைக்கப்படுபவர் விண்ட் செர்ப்.
TCP/IP தொழில் நுட்பம் வளர்ச்சி அடைய இவருடைய பணி அதிகம் உதவியது.
இவர் அமைத்த MCI mail சிஸ்டம் தான் இன்றைய மின்னஞ்சல்களுக்கு முன்னோடியாய் அமைந்தது.
இணைய பெயர்களை வரையறை செய்திடும் ICANN எனச் சுருக்கமாக அழைக்கப்படும் Internet Corporation for Assigned Names and Numbers என்னும் அமைப்பினை உருவாக்கிய முன்னோடி இவர்.
3. இராபர்ட் பாப் கான்(Robert “Bob” Kahn)
இவருடைய தோழரும் உடன் பணியாற்றியவருமான விண்ட் செர்ப் போல இவரும் இணையத்தை உருவாக்கிய தந்தை என அழைக்கப்படுகிறார்.
TCP/IP தொழில் நுட்பம் வளர்ச்சி அடைய இவருடைய பணியும் அதிகம் உதவியது.
இவர் ஆய்வுகளை மேற்கொள்ள உதவியாக Corporation for National Research Initiatives (CNRI) என்னும் அமைப்பினை உருவாக்கினார். இந்த அமைப்பு நெட்வொர்க் தொழில் நுட்பத்தில் அதிகக் கவனம் செலுத்தியது.
4. ஜிம் கிம்சி(Jim Kimsey)
இணைய சேவை வழங்குவதில் உலகிற்கே முன்னோடியாக விளங்கும் AOL நிறுவனத்தை நிறுவி, அதன் தலைமை நிர்வாகியாகப் பணியாற்றியவர்.
ஒரு சமயம் இந்நிறுவனத்தின் இணைய சேவையைப் பெற்றவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியாக இருந்தது.
இணையத்தில் ஒருவருக்கொருவர் நேரடியாக தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் internet chat மற்றும் instant messaging இவர் நிறுவனத்தால் பிரபலமாகியது.
மேலும் தங்களுக்கேற்ற வகையில் இணைய தளத்தினை உருவாக்கிய வழிகளும் இவர் தந்தவையே.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக