தானியங்கி சாதனங்களை உற்பத்தி செய்யும் பிரபல நிறுவனமான Katayama Kogyo தற்போது அதிநவீன இலத்திரனியல் வாகனம் ஒன்றினை உருவாக்கியுள்ளது.
Walking Bicycle என அழைக்கப்படும் இச்சாதனம் 3 சில்லுகளை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது அதிக பட்சமாக மணிக்கு 24 கிலோமீற்றர் வேகத்தில் பயணம் செய்யக்கூடியதாகவும், இதில் இணைக்கப்பட்டுள்ள மின் கலத்தின் உதவியுடன் 20 கிலோமீற்றர்கள் தூரம் பயணிக்கும் வல்லமை கொண்டதாகவும் காணப்படுகின்றது.
இதன் எடையானது 36 கிலோகிராம்களாக அமைந்துள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஜப்பானில் முதன் முறையாக அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த வாகனத்தின் பெறுமதி 3,000 டொலர்கள் ஆகும்.
அதன் பின்னர் படிப்படியாக ஏனைய நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக