தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, January 10, 2016

Sunday Special - முட்டை வட்லாப்பம்!


என்னென்ன தேவை?
முட்டை - 10, சர்க்கரை - 2 டம்ளர்,
தேங்காய் - 1,
ஏலக்காய் - 3,
முந்திரி - 6,
நெய் - 1/2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
தேங்காயை அதிகம் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து, கெட்டியாகப் பால் எடுக்கவும். முட்டையை நன்கு நுரை பொங்க அடிக்கவும். சர்க்கரையைப் பொடித்து வைக்கவும்.
சர்க்கரை, தேங்காய்ப் பால், முட்டை மூன்றையும் நன்கு கலக்கவும். முந்திரியைப் பொடியாக அரிந்து நெய்யில் வறுத்துச் சேர்க்கவும்.
ஏலக்காயை பிரித்து, உள்ளே உள்ள விதையை எடுத்து லேசாக வறுத்துப் பொடித்துச் சேர்த்து, நன்கு கலக்கி, குக்கரில் அடியில் வைக்கும் தட்டை வைத்து அதன் மேல் ஒரு டிபன் பாக்ஸில் கலவையை ஊற்றி மூடிபோட்டு குக்கரை மூடி 5 விசில் விட்டு 10 நிமிடங்கள் சிம்மில் வைத்து அவிக்கவும்.
இப்போது முட்டை வட்லாப்பம் ரெடி!

No comments:

Post a Comment