தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 19 ஜனவரி, 2016

வயிற்றுப் புண், பல் வலியை குணப்படுத்தும் கொய்யா இலைகள்

கொய்யா இலையில் ஆன்டி ஆக்சிடன்டுகள் நிறைந்துள்ளதால் வயிறு மற்றும் பல் சம்மந்தமான பிரச்னைகளுக்கு மருந்தாகிறது.
மேலும் இதில் பாலிஃபீனால்கள், கரோட்டினாய்டுகள், ப்ளேவோனாய்டுகள் மற்றும் டானின்கள் இருப்பதால், பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. 
வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் 30 கிராம் கொய்யா இலையை, ஒரு கையளவு அரிசி மாவுடன் சேர்த்து 1-2 டம்ளர் நீரில் கலந்து தினமும் இரண்டு முறை குடித்து வர வயிற்றுப்போக்கிற்கு உடனடி நிவாரணம் கிடைக்கும். 
செரிமான பிரச்சனை இருந்தால் கொய்யா இலையின் டீயை குடித்தால் செரிமான நொதிகள் தூண்டப்பட்டு செரிமானம் நடைபெறும். 
கொய்யா மரத்தின் இளம், புதுக் கிளைகளின் இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.
நீரிழிவு நோய் இருப்பவர்கள் கொய்யா இலையைக் கொண்டு டீ தயாரித்து குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கலாம்.
அதிலும் இந்த டீயை தொடர்ந்து 12 வாரங்கள் குடித்து வந்தால் இரத்த சர்க்கரையின் அளவைக் குறைக்கலாம். 
ஆராய்ச்சி ஒன்றில் தொடர்ந்து மூன்று மாதங்கள் கொய்யா இலை டீயை குடித்து வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் குறைந்து நல்ல கொழுப்புக்களின் அளவு பராமரிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
கொய்யா இலைகளை கொதி நீரில் போட்டு கஷாயமாக்கிக் குடித்தால், உதிரப் போக்கு தடைபடும்.
மேலும் கொய்யா இலை கஷாயத்தை தினமும் வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தைராய்டு சுரப்பு சமநிலைக்கு வரும்.
கொய்யாப் பழம் மலச்சிக்கலைப் போக்கும். கொய்யா இலை கஷாயம் வாந்தி-பேதியைத் தடுக்கும். ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் கொய்யா இலையைக் காய்ச்சி கொப்பளிக்கலாம்.
கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகின்றன.
கொய்யா இலைகளை வாயில் போட்டு மென்றால், வயிற்றுப் புண், பல் வலி நீங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக