தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 6 ஜனவரி, 2016

யாழ்ப்பாணத்தில் இருந்த சாதிமுறைமை!


பலர் கேட்டதற்கு இணங்க இந்தப் பதிவை தரவிடுகிறேன்
இது யாரையும் மன உளைச்சலுக்கு உள்ளாக்க நான் விரும்பலை
எது எப்படியோ
உங்களின் வேண்டுதலுக்கு இணங்க
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
யாழ்ப்பாணத்தில் இருந்த சாதிமுறைமைபற்றி பல்வேறு நூல்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ சொல்லி இருக்கின்றன.

1790 இல் யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பின்போது காணப்பட்ட சாதிகள் பற்றி யாழ்ப்பாணச்சரித்திரம் (1912) என்கின்ற நூலில் அ. முத்துத்தம்பிப்பிள்ளை குறிப்பிட்டிருக்கின்றார். அதன் பிரகாரம் சாதி அமைப்பு கீழ்வருமாறு தரப்பட்டிருக்கின்றது.
வேளாளர்
பரதேசிகள்
மடைப்பள்ளியர்
மலையகத்தார்
செட்டிகள்
பிராமணர்
சோனகர்
தனக்காரர்
குறவர்
பரம்பர்
சிவியார்
பள்ளிவிலி
செம்படவர்
கடையர்
பரவர்
ஒடாவி
சான்றார்
கன்னார்
தட்டார்
யானைக்காரச்சான்றார்
கயிற்றுச்சான்றார்
கரையார்
முக்கியர்
திமிலர்
கோட்டைவாயில் நளவர்
கோட்டைவாயிற் பள்ளர்
மறவர்
பாணர்
வேட்டைக்காரர்
வலையர்
வர்ணகாரர்
வண்ணார்
தந்தகாரர்
சாயக்காரர்
தச்சர்
சேணியர்
கைக்கோளர்
குயவர்
கடையற்காரர்
குடிப்பள்ளர்
சாயவேர்ப்பள்ளர்
தம்பேறு நளவர்
தம்பேறுப்பள்ளர்
குளிகாரப்பறையர்
பறங்கி அடிமை
கொல்லர்
தவசிகள்
அம்பட்டர்
கோவியர்
தமிழ்வடசிறை
நளவர்
பள்ளர்
பறையர்
துரும்பர்
எண்ணெய்வணிகர்
சாயவேர்ப்பள்ளர்
சாயவேர்ப்பறையர்
அர்ச்கோயில் பறையர்.
ஆனால் இதிலே
மலையகத்தார்
சோனகர்
ஒடாவி
பறங்கி அடிமை
ஆகியன சாதி என்பதை விட அவர்களது இன ரீதியான இடரீதியான பாகுபாடாகத்தான் காணப்படுகின்றது.
இதன்பின்னர் நீண்டகாலப்போக்கில் இந்த சாதி அமைப்பினுள்ளே கிளைச்சாதிகள் மறைந்து ஏனையவை நிலவி வருகின்றன எனலாம்.
ஆனாலும் இன்றைய நாளிலும் சில சாதி மக்களிடையே கிளைச்சாதிகள் (இடசார்பாயோ அல்லது பழக்கம் சார்பாயோ தெரியவில்லை) காணப்படுவது கண்கூடு (செம்படவர் – மேல்கரை, கீழ்க்கரை). ஆனால் நான் நிர்ஷனின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டது போன்று அதன் தீவிரம் பெருமளவான நிகழ்வுகளில் குறைவடைந்து, திருமணத்தில் மிக்க தீவிரமடைந்திருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் சாதியை விட்டு திருமணம் செய்வதை நூறுவீதம் தவிர்த்து விடுகின்றார்கள்). அதற்காக யாழ்ப்பாணம் முழுவது அந்த நிலைதான் என்பது அர்த்தமல்ல. நான் பணிபுரிந்த சில இடங்களில் சில சாதிகாரர்களை கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை என்பது இன்னமும் நடைமுறையில் இருக்கின்றது. இப்பொழுது அச்சாதியினைச்சேர்ந்த மக்கள் தங்களுக்கென்று கோயில் அமைத்து இருக்கின்றார்கள். அதேபோல் இன்னோரிடத்தில் ஒரே கிராமத்தில் இருக்கும் இரு சாதி மக்கள் தமக்குள் எந்த சம்பந்தமும் அற்று இருக்கிறார்கள். ஒருவர் ஒருவரை பற்றி பேசுவது கூட இல்லை. இவை சில உதாரணங்கள் தான்.
ஆனால் அதற்காக கைபட்டால் அடிப்பது போன்ற அளவுக்கு பிரச்சனைகள் இல்லை. பெரும்பாலான இளைஞர்கள் முற்போக்குள்ளவர்களாக இருப்பதால் இது சாத்தியமாகி இருக்கின்றது.
ஆனால் இதனை விட வித்தியாசமான சாதி அமைப்பொன்று யாழப்பாணத்தரசர் காலத்தில் இருந்ததென்று பண்டைய நூல்கள் சொல்கின்றன. அவற்றை தொகுத்து இன்னும் ஒரு பதிவில் தர முயற்சிக்கின்றேன்.

Siri Raja

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக