தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, January 26, 2016

உடல் கழிவுகள் வெளியேற வேண்டுமா?

ஆசியாவின் தென் பகுதியில் மட்டுமே வளரும் நன்னாரியில் அனேக பயன்கள் அடங்கியுள்ளன.
இதன் வேரில் இருந்து சார் எடுத்தே நன்னாரி சர்பத் தயாரிக்கப்படுகின்றன. இந்த சர்பத் உடலுக்கு குளிர்ச்சியை தருவதுடன் உடனடி புத்துணர்ச்சியையும் தருகிறது.
மேலும் ரத்தத்தை சுத்தமாக்கும் தன்மையும் இந்த வேருக்கு உண்டு. இது மட்டுமில்லாமல் சிறுநீர் பிரச்சனையை சரிசெய்வது, உடலில் வேர்வையின் உற்பத்தியை அதிகரிப்பது, மூட்டுவலி, உடல் சூடு, தோல் நோய்கள் போன்றவற்றுக்கும் இந்த நன்னாரி ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றது.
ஒரு பிடி நன்னாரி வேரை எடுத்து இடித்துகொள்ளுங்கள். பின்னர் அதை நீரில் இட்டு கொதிக்க வைத்து ரசம் வைக்க வேண்டும்.
காலையில் வெறும் வயிற்றில் அரை டம்ளர் ரசத்தை சர்க்கரை சேர்த்து பருகி வந்தால் சிறுநீர் பிரச்சனை தீரும்.
அது போல் நன்னார் வேர்த்தூள், கால் பங்கு தண்ணீர், அரை பங்கு சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து மணப்பாகு போல் செய்து கொள்ளுங்கள். தினமும் காலையில் சிறு அளவில் இதை சாப்பிட்டால் உடலில் உஷ்ணம் குறையும்.
கோடை வறட்சியை சமாளிக்க இயற்கை மருந்து
உடலுக்கு உடனடியாக சக்தியளிக்க கூடிய இயற்கை ஸ்டீராய்டுகள் நன்னாரியில் நிறைந்து உள்ளதால் விளையாட்டு வீரர்கள் நன்னாரி டீயை அதிகம் விரும்பி பருகுகிறார்கள்.
உடற்பயிற்சி செய்வதால் உடலில் ஏற்படும் வெப்பம் தணிவதுடன் உடலுக்கு உடனடி சக்தியளிப்பதால் வீரர்களால் அதிகம் நன்னாரி பயன்படுத்தப்படுகிறது.
கோடையை குளிர்ச்சியாக கொண்டாட நன்னாரி பானம், நன்னாரி சர்பத் பருகி உடல் நலத்தை காத்து கொள்வோம்.
நன்னாரி பால்
நன்னாரியை இடித்து நடுவில் உள்ள நரம்பை நீக்கி கொள்ள வேண்டும். சுக்கின் மேல் தோலை நீக்கி கொள்ள வேண்டும். பின்பு எல்லா பொருட்களையும் மிக்சியில் இட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
தேவைப்படும் பொழுது 2 தேக்கரண்டி பொடியை 100 மி.லி நீரில் நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி அத்துடன் 100 மி.லி பால், 1 தேக்கரண்டி பனங்கற்கண்டு கலந்து பருகி வரலாம்.
காபி, டீ, அதிகம் பருகுபவர்கள் அதை தவிர்த்து இந்த நன்னாரி பாலை தினம் இரு வேளை பருகி வரலாம். நீரிழிவு நோயாளிகள் ஆவாரம்பூ (காய்ந்தது) 100 கிராம் கலந்து அரைத்து பயன்படுத்தினால் உடல் குளிர்ச்சி உண்டாகும்.
உடல் கழிவுகள் வெளியேறும். உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். தோல் நோயால் துன்பப்படுபவர்கள் தினம் இதை பருக விரைவில் நல்ல குணம் தெரியும்.

No comments:

Post a Comment