தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, January 31, 2016

எண் 5 ல் பிறந்தவருக்குரிய சகல பலன்கள்! பிறப்பு முதல் இறப்பு வரை!


எண் 5 யில் பிறந்தவருக்குரிய பலன்கள்.
புதன் நட்சத்திரம் :- ஆயில்யம், கேட்டை, ரேவதி
இந்த எண் அனைவராலும் மிகவும் விரும்பப்படும் எண்ணாகும்.அனைத்து எண்களுக்கும் இந்த எண் பொதுவாக உள்ளது. மிகநன்மையும், அதிர்ஷ்டமும் தருவது இந்த எண்ணாகும். புதனின்ஆதிக்கம் வலுத்து இருப்பவர்களுக்குப் பெருத்த யோகங்களைக்கொடுக்கும். புதனின் எண் இல்லாதவர்களுக்கும்கூட இந்தஆதிக்கமானது, நல்ல பலன்களைத் தரவல்லது! இதனாலேயேபெரும்பாலான எண் சோதிடர்கள், பெயர் எண் 5 ஆக வரும்படிஅமைத்துக் கொடுக்கிறார்கள்.
மற்ற அதிர்ஷ்ட எண்களான 1, 3, 6, 9ஆகியவைகள் (அந்தக் குறிப்பிட்ட எண்ணானது) நல்லஅமைப்புடனும், வலுவுடனும் அன்பர்களுக்கு இருந்தால் தான் நன்மைபுரியும். இல்லையெனில் தீய பலன்களைக் கண்டிப்பாககொடுத்துவிடும். உதாரணமாக 3 ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு 24, 33, 42, 51 ஆகிய 6 எண்ணின் வர்க்கங்கள் எந்த ஒரு பலனையும்கொடுக்காது. அதுமட்டுமன்று, அவர்களை நிச்சயம் பலதோல்விகளையும் வேதனைகளையும் ஆழ்த்திவிடும்.
ஆனால் 5 மட்டும் யாருக்கும் தீமை புரியாது! சோதிட சாத்திரத்தல்நவக்கிரகங்களில் சந்திரனுக்கு மட்டும் எல்லா இராசி வீடுகளிலும்சமமாகவும், நட்பாகவும் (விருச்சிகம் தவிர) சொல்லப்பட்டுள்ளது!அதனால்தான் சந்திரனின் ஆதிக்கம் ஜாதகத்தில் பொதுவாக எல்லாஇராசிகளுக்கு நன்மையான பலன்களையே கொடுக்கும். கோசாரபலன்களும் சந்திரனின் நிலையையே அடிப்படையாகக்கொண்டுள்ளது.
ஆனால் எண்கணிதத்தில் 5ம் எண்ணே அத்தகைய ஒரு சிறப்பானஇடத்தைப் பெற்றுள்ளது. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ஆகிய எண்வரிசையில் 5-ம் எண்ணே மற்ற எண்களுக்கும் நடுவில் அமைந்துள்ளதுஎன்பதே இதன் சிறப்புக்கும், நற்பலன்களுக்கும் காரணம். மற்றஎண்காரர்கள் தங்களது துன்பங்களையும், துயரங்களையும் கண்டுகலங்கும்போது இவர்கள் மட்டும், அவைகளைச் சவால்களாகஎடுத்துக் கொள்வார்கள். 5-ஆம் எண்காரர்களின் புத்தி அதாவதுஅறிவு மிகவும் அற்புதமானது!
ஒவ்வொரு நிமிடமும் புதுப்புது யோசனைகள் (!) பிரஞ்சத்திலிருந்துஇவர்களுக்குத் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். தேவர்களில்அறிவுக்கும், புத்திக்கும், செயல்திறனுக்கும் பெயர் பெற்றவர் விஷ்ணுபகவான்தான்! அவரின் முழுக்கடாட்சமும் பொருந்திய எண் இதுதான்(5 எண்).
மற்ற எண்காரர்களைக் காப்பதற்காகவே (விஷ்ணுவின் தொழில்மக்களைக் காத்தல் அல்லவா), 5-ம் எண்ணின் பலம் உதவுகிறது! 9எண்கள் வரிசையில் எந்த ஒரு கிரகத்தினருக்கும் இல்லாத ஒரு கவர்ச்சி(காந்த சக்தி) இந்த 5-ம் எண் நபர்களுக்கு உண்டு! எனவேதான் இந்தஎண்ணைக் காந்த எண் அல்லது ஜனவசியம் நிறைந்த எண் என்றுகூறவார்கள்.
காந்தமானது, எந்த அளவு இரும்பினையும், எளிதாகஇழுத்து விடும் தன்மை உடையது. அதேபோன்றே, மக்களைக்கவர்வதில் இவர்களுக்கு நிகர் எவரும் இலர். இவர்களுக்கு அடுத்தநிலையில்தான் 6-ம் எண்காரர்கள் உள்ளனர். ஏனெனில்அவர்களுக்கும் ஜனவசியம் இயற்கையாக உண்டு!
இவர்களது பேச்சில் கேலியும் (அடுத்தவரைப் புண்படுத்தாமல்)கிண்டலும், சிரிப்பும் கலந்திருக்கும். எத்தகைய நபர்களைச்சந்தித்தாலும், தங்களது தனித்தன்மையை (Presence) அவர்களுக்குச்சீக்கிரம் உணர்த்தி விடுவார்கள். பல வருடகாலம் நண்பர்களாகநீடித்துத் தொடர்பு கொள்ளும் தன்மையும், கவர்ச்சியும், நட்புப் பலமும்இந்த 5 எண்காரர்களுக்கு உண்டு. மேலும் இவர்களுக்கு காரில்,ரயிலில், விமானத்தில், அடுத்த ஊரில், அடுத்த நாட்டில் எதிர்பாராதநண்பர்களும், அவர்களின் மூலம் நட்பு மற்றும் பரஸ்பர உதவியும்எளிதில் இவர்களுக்குக் கிடைத்துவிடும்.
எப்போதும் எடுப்பாகவும்,அழகாகவும், ஆடைகளையும், அழகு சாதனங்களையும் அணிந்துகொள்ளும் விருப்பம் கொண்டவர்கள். இவர்கள் தாங்கள் எடுத்துக்கொண்ட எந்தத் துறையிலும், தங்களது திறமையின் மூலம் விரைந்துஉச்சியை அடைந்துவிட வேண்டும் என்று துடிப்பார்கள். இவர்கள்சாப்பிடுவதில் வேகமாக இருப்பார்கள். பேச்சிலும் நடையிலும் வேகம்உண்டு! பார்வைக்கு எளிமையாக இருந்தாலும் அரசர்களையும்கவர்ந்து விடுவார்கள்.
பிறர் முறையாகக் கணக்குகள் எழுதி வைத்துக் கொள்ள நினைக்கும்விபரங்களையும்கூட இவர்கள் மனதிலேயே நிலையாக வைத்துக்கொள்ளவும். விரும்பிய போது அவைகளை சரியாகஎடுத்துக்காட்டியும் சொல்லுவார்கள்.
எப்போதுமே பெரியமனிதர்களின் ஆதரவு இவருக்கு உண்டு. தங்களது சொந்தப்படைப்புக்களைவிட அடுத்தவர்களின் கருத்துக்களையும்,விஷயங்களையும் தொகுத்து அவைகளை ஆராய்ந்து முடிவுக்கு வரும்அறிவுத் துறைகளில் இவர்கள் சிறப்பாக விளங்குவார்கள். ஒரேசமயத்தில் பல காரியங்களில் கவனம் செலுத்துவம் அஷ்டாவதானிகள்இவர்கள்தான். புகழ்பெற்ற உலகக் கவிஞர் ஷேக்ஸ்பியர், மெஸ்மரிசம்கண்டுபிடித்த மெஸ்மர் போன்றவர்களெல்லாம் இந்த எண்ணில்பிறந்தவர்களே!
இவர்களின் தொழில்கள்
எழுத்தாளர் பணியில் இவர்கள் நன்கு பிரகாசிப்பார்கள். பேனாநண்பர்கள் அதிகம் உடையவர்கள். அரசியல்துறையிலும், அதிர்-ஷ்டம் உடையவர்கள். இவர்களது பேச்சிலும் விவாதங்களிலும்அரசியல் கலப்பு அதிகமாக இருக்கும். அறிவியல் துறைப் பணிக்கும்(Science), கலைத்துறை, சோதிடம், கணிதம் போன்ற துறைகளும்ஏற்றவை! நடிகர்கள், நடிகைகள், கலைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள்போன்றவர்களாக புகழ்பெறுவார்கள்.
இவர்கள் எந்த வியாபாரமும் செய்யலாம். (Any Business) ஜனவசியம்நிறைந்தவர்கள். இவர்கள் இருக்கும் இடத்திற்குக் கூட்டம் அதிகம்வரும். தரகர்களாகவும் (Brokers) கமிஷன் முகவர்களாகவும் மிகவும்புகழ் பெறுவார்கள். பிரயாண முகவர்களாகவும் (Travel Agents) நன்குசம்பாதிப்பார்கள். இருப்பினும் ஒரு தொழிலை நன்கு செய்துகொண்டிருக்கிற போது, இன்னொரு தொழில் செய்தால் இதைவிடநன்றாக இருக்குமே என்று யோசிப்பார்கள். பின்பு இதை நடுவில்விட்டுவிட்டு, புதிய தொழிலில் துணிந்து இறங்கி விடுவார்கள்!இதைப்போன்று அடிக்கடி செய்யும் தொழில்களை, வியாபாரங்களைமாற்றக்கூடாது.
ஆனால் தாங்கள் செய்து கொண்டிருக்கும் தொழில்களில் புதுமையைப்புகுத்தி வெற்றி அடையலாம். உலகத்தின் நாடுகளுக்கிடையேஅமைதியை ஏற்படுத்தும் தூதுவர்களாக (Ambassadors) நன்குவிளங்குவார்கள். வான ஆராய்ச்சி, செய்தி பரப்புத் துறைகள்ஆகியவையும் இவர்களுக்கு வெற்றி தரும். பொது மக்கள் தொடர்புசம்பந்தமான (P.R.O) தொழில்களிலும் நன்கு பிரகாசிப்பார்கள்.
இவர்களது திருமண வாழ்க்கை
இவர்களுக்குக் காதல் மீது மோகம் அதிகம். துணிந்து காதல்களில்ஈடுபடுவார்கள். அதுவும் 5, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களால்மிகவும் ஈர்க்கப்படுவார்கள். 1, 3, 6 பிறந்தவர்களையும் மணக்கலாம்.9, 18, 27, 1, 10, 19, 28 ஆகிய தேதிகளும் கூட்டு எண் 1, 9 வரும்தேதிகளும் திருமணத்திற்கு உகந்தவை. மேலும் 6, 15, 24 தேதிகளும்,கூட்டு எண் 6 வரும் தேதிகளும் ஓரளவுக்குச் சாதகமானவையே.குழந்தை பாக்கியம் இவர்களுக்குக் குறைவு. எனவே 2, 6 ஆகியஎண்களில் பிறந்தோரைத் திருமணம் செய்தால் குழந்தை பாக்கியம்உண்டு.
இவர்களது நண்பர்கள் / கூட்டாளிகள்
பொதுவாக மற்ற எண்காரர்கள் அனைவரும் இவர்களுக்குநண்பர்களே! குறிப்பாக 9, 1, 6 தேதிகளில் பிறந்தவர்கள்இவர்களுடன் மிகவும் அதிகமாகப் பழகுவார்கள். இவர்கள் யாருடனும்கூட்டுத் தொழில் சேர்ந்து செய்யலாம். மற்ற எண்காரர்களை,அனுசரித்துச் சென்று, வெற்றி பெற்று விடுவார்கள்.
இவர்களது நோய்கள் …
பொதுவாக இவர்கள் அதிகமாகச் சிந்தனைகளில் ஈடுபடுவதால் மனஅமைதிக் குறைவு, மனஇறுக்கம் (டென்ஷன்) மனச்சோர்வுஆகியவற்றால் பாதிக்கப்படுவார்கள்.
நரம்பு பலவீனமே அதிகமாகப்பாதிக்கும். அடிக்கடி ஏதாவது நரம்புகளில் வலி ஏற்படும்.சிறுவயதுகளில் காக்கை வலிப்புப் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.எனவே இவர்கள் முன்பு சொன்னபடி நல்ல தூக்கம் நல்ல உணவுஆகியவைகளைக் கடைப்பிடித்தால், பல நோய்களைத்தவிர்த்துவிடலாம். சிற்றின்ப இச்சைகளை ஓரளவு குறைத்துக்கொண்டால், நரம்பு பலம் கூடும். கடுமையான நிலைகளில்நரம்புகளின் பாதிப்பால் பக்கவாதம், ஒருபுறம் நரம்புகள் சுருக்கிக்கொள்ளும் நிலை ஏற்படும்.
எனவே இவர்கள் உணவில் அதிகமாகப் பருப்பு வகைகள்தானியங்கள் ஆகியவைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
புதன் யந்திரம் & புதன் & 24
9 4 11
10 8 6
5 12 7
புதன் மந்திரம் & புதன் & 24
ப்ரியங்கு கலிகா ஸ்யாமம்
ரூபேணாப்ரதிமம் புதம்!
ஸௌம்யம் ஸௌம்ய குணோபேதம்
தம்புதம் பிரணமர்மயஹம்
எண் 5. சிறப்புப் பலன்கள்
9 எண்களிலும் 5 தான் அனைவராலும் விரும்பப்படுகிறது! காரணம் 5-ம் எண்தான் மற்ற 9 எண்களுக்கும் நடுவில் உள்ளது! இந்த எண்ணேமற்ற அனைத்து மக்களையும் (எண்களையும்) ஈர்க்கும் சக்தி மிகுந்தஎண்ணாகும்.
எனவே, இவர்கள் எளிதில் அனைவரிடமும் நட்புக் கொண்டுவிடுவார்கள். அனைவரையும் அனுசரித்துச் செல்லும் இயல்பினர்.அறிவு என்கிற அற்புதத்தின் விளக்கம் இவர்கள் தான். புதியதாகஎதையும் அறிந்து கொள்ளும் ஆர்வமும், அதை வாழ்வில் உடனடியாகபயன்படுத்தி கொள்ளும் திறமையும் உண்டு. எந்த வகையானசோதனைகளையும், சிரித்துக் கொண்டே சமாளித்து விடுவார்கள்.தன்னம்பிக்கை மிகுந்தவர்கள்.
மற்றவர்களைவிட அறிவுத் திறனும், திறமையும் உண்டு! இவர்கள்நெளிவு, சுழிவுகள் மிகத் தெரிந்தவர்கள். சீக்கிரமாக, அதுவும்அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்ற முயற்சியிடன்தான் எந்தத்தொழிலிலும் ஈடுபடுவார்கள். அதே போன்று இலாபங்களையும்அடைவார்கள். புதிய முயற்சிகளிலும் துணிந்து இறங்கி விடுவார்கள்.நணடம் வந்தபோதும் இவர்கள் கலங்கமாட்டார்கள். மிகுந்தசிந்தனைகள் செய்பவர்களாதலால் நரம்பு பலவீனம் அடையும்.எனவே, சில சமயங்களில் அதிகமான வேலை செய்யும் போது,எளிதில் எரிச்சலும் கோபமும் கொள்வார்கள்.
எத்துறையிலும் வேகம்,வேகம் என்று செயலாற்றுபவர்கள் இவர்கள்தான். பிறரைத் தூண்டிவிட்டு வேகமாக எந்த வேலையையும் மிரட்டி வாங்கி விடுவார்கள்.உடல் உழைப்பில் நாட்டம் குறைவு! ஆனால் மூளை உழைப்பில்சிறந்த விளங்குவார்கள். மகாவிஷ்ணுவைப் (புராணங்களில்) போன்றதிறமையும், புத்திசாலித்தனமும் உண்டு!
நிறையப் பணம் கிடைப்பதென்றால், தீய வழிகளிலும் துணிந்துஇறங்கி விடுவார்கள். ஆனால் எப்படியாவது தண்டனையிலிருந்துதங்களது புத்தியால் தப்பித்துக் கொள்வார்கள். இவர்களைப்புகழ்ந்தால் அப்படியே மயங்கி விடுவார்கள். எனவே, இவர்களைப்புகழ்ந்தே மற்றவர்கள் தங்களது செயல்களை இவர்களிடம் செய்துகொள்ளலாம். அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மிக எளிதில் தீர்வுசொல்லி விட்டுவார்கள். டாக்டர், வியாபாரிகள், பொருள்ஏஜெண்டுகள் போன்று பணம் சம்பாதிக்கும் தொழில்களிலேயேஇவர்களது எண்ணம் செல்லும்.
வெளிநாடு, வெளியூர்செல்வதென்றால், உடனே புறப்பட்டு விடுவார்கள். தங்களதுபேச்சிலும், முடிவு எடுப்பதிலும் வேகமாகச் செயல்படுவார்கள்.மற்றவர்களுக்குப் புரியவில்லையென்றால் கோபம் எளிதில்வந்துவிடும். அதிக உழைப்பும் ஓயாத அலைச்சலு ஆற்றலும், புத்திசாதுர்யமும் அதிகம். சூதாட்டம், பந்தயம், புரோக்கர் தொழில் மூலம்பொருள் பணம் குவிக்கும் யோகம் உண்டு.
காதல் விஷயங்களில் ஈடுபாடு உண்டு. காதலிப்பவரையே மணக்கும்தைரியமும், பிடிவாதமும் உண்டு. வசதியான மனைவியையேதேடுவார்கள். எவ்வளவு பெரிய காரியமானாலும் பயமோ, தயக்கமோஇன்றித் துணிந்து ஈடுபட்டு அதை வெற்றியாக மாற்றிக்காட்டுவார்கள்.
5 எண்ணின் பலம் குறைந்தவர்கள் தீய காரியங்களில் துணிந்துஇறங்குவார்கள். பிறரை வஞ்சித்தல், பொய் சாட்சி சொல்லுதல்,ஏமாற்றிப் பிழைத்தல், போர்ஜரி போன்றவற்றில் ஈடுபட்டுக் குறுக்குவழியில் பணம் சம்பாதிப்பார்கள். அரசாங்கப் பணிணைவிடச்சொந்தத் தொழிலே சிறப்புத் தரும். கூட்டு எண்கள் ஒத்து வந்தால்மட்டுமே அரசாங்கப் பணி சிறப்புத் தரும். இந்த எண்காரர்களைவேலைக்கு வைத்து முதலாளிகள் லாபம் சம்பாதித்து விடுவார்கள்.இவர்கள் ஜனவஸ்யம் நிறைந்தவர்கள். எனவே, இவரைச் சுற்றிலும்எப்போதும் மக்கள் இருந்த கொண்டே இருப்பார்கள்.
ஒருவிதக் குருட்டுத் தைரியம் இவர்களுக்கு மனதில் இருந்துகொண்டே இருக்கும். புதிய சாதனைகளை விரைந்து செய்யவேண்டும் என்ற விருப்பம் நிறைந்தவர்கள். அடுத்தவர்களின்கருத்துப்படி இவர்கள் நடந்தால் தோல்விகள்தான் அதிகமாகும்.இவர்களுக்கு இறைவனின் அருளால், திடீர் யோசனைகள் அல்லதுஞானோதயம் ஏற்படும்.
அதன்படி இவர்கள் செயலாற்றினால் வெற்றிநிச்சயம். இவர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டுத் தாங்கள் செய்யுமதொழிலை அடிக்கடி மாற்றிக் கொள்ளக்கூடாது. நிரந்தரமான ஒருதொழிலை தேர்ந்தெடுத்து, அதில் புதிய வழிமுறைகளையும்,புதுமையையும் புகுத்தி வெற்றி பெற வேண்டும். ஆழம் தெரியாமல்,ஒன்றில் இறங்கக் கூடாது. செய்யும் தொழிலைப் பிடிக்காமல்பாதியிலேயே விட்டுவிட்டு, அடுத்த தொழிலில் இறங்கக்கூடாது.
இவர்கள் இரவில் நெடுநேரம் சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள்.இதனால் இரவில் தூக்கம் குறையும். மனச்சோர்வுகள், நரம்புக்கோளாறுகள் ஏற்படும். எனவே, தினமும் 6 முதல் 8 மணி நேரம்தூங்குவதைப் பழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். தியானம்,உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபட்டு, மனதைச் சலனமில்லாமல்வைத்துக் கொள்ளப் பழக வேண்டும். பின்பு உடல் நலம் தானே வரும்.சுறுசுறுப்பும், வேகமும், இலாப நோக்கும் இவர்கள் கூடப்பிறந்தவை.எனவே, வியாபாரம், கமிஷன் தொழில். டிராவல் ஏஜெண்ட்ஸ்விற்பனைப் பிரதிநிதிகள், அரசியல் போன்ற மக்கள் தொடர்புத்தொழில்கள் மிக்க நன்மை தரும்.
உடல் அமைப்பு / உடல் நலம்
சற்றுச் சதைப்பிடிப்பான உடல் அமைப்பு அமையும். நடுத்தரமானஉயரமும், மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் கவர்ச்சியான முகமும்,கண்களும் உண்டு. நிமிர்ந்த பார்வையும், வேகமான நடையும் உண்டு.
அதிர்ஷ்ட தினங்கள் Lucky Dates ஒவ்வொரு மாதமும் 5, 14, 23 ஆகியதேதிகளும் 9, 18, 27 ஆகிய தேதிகளும் மிக அதிர்ஷ்டமானவை. தேபோன்று கூட்டு எண் 5 அல்லது 9 வரும் தினங்களும்அதிர்ஷ்டமானவையே!
இவர்களுக்கு மற்ற அனைத்து எண்காரர்களும் உதவுவார்கள்.இருப்பினும் 5, 9 எண்காரர்கள் இவர்களுக்கு மிகவும் நன்மைசெய்வார்கள்.
அதிர்ஷ்ட இரத்தினம்
இவர்களுக்கு அதிர்ஷ்ட இரத்தினம் வைரம் எனப்படும். DIAMONDஆகும். இந்தக் கற்களில் தரமான கற்கள் (ORIGINAL) கிடைப்பதுஅரிதாக உள்ளது. ZIRCON எனப்படும் கற்களும் இவர்களுக்குச்சிறந்த பலன்களையே அளிக்கும். அதிர்ஷ்ட நிறங்கள் Lucky coloursசாம்பல் நிறம் (GREY) மிகவும் ஏற்றது. அனைத்து இலேசானவண்ணங்களும் ஏற்றவையே. (LIGHT COLOURS) மினுமினுக்கும்உடைகளும், மினுமினுக்கும் வண்ணங்களும் நன்மையே புரியும்.கறுப்பு, சிவப்பு, பச்சை போன்ற ஆழந்த (DARK) வண்ணங்களைநீக்கிக் கொள்ளவும்.
முக்கியக் குறிப்பு
இவர்களுக்கு நரம்புச் சக்தி குறைவு. எனவே குழந்தைச் செல்வம்தடைப்படும். மனைவியின் எண்களில் 5 எண் வந்தால் குழந்தைச்செல்வத்தைக் குறைத்து விடும். எனவே மனைவியைத் தேர்வுசெய்வதில், குழந்தைச் செல்வம் உள்ள எண்களாகத் தேர்வு செய்துகொள்ளவும். குடும்பத்தில் தங்களது வேகமான பேச்சையும்,செயல்களையும் குறைத்துக் கொண்டால், இன்ப வாழ்க்கை அமையும்.உடல் உழைப்பிலும் சற்று ஈடுபட வேண்டும். அதுவே உடல்நலத்திற்கு உகந்ததாகும்.
5-ஆம் தேதி பிறந்தவர்கள்
புதன் கிரகத்தின் முழு அம்சம் பெற்றவர்கள். நல்ல தெய்வீக வாழ்க்கைஅமையும். அறிவும், தெளிவும் உண்டு. இவர்கள் மற்றவர்களைமதிப்பவர்கள். அழகான தோற்றம் உடையவர்கள். இவர்களின்பேச்சிலும் நடத்தையிலும் ஒருவித ஈர்ப்புச் சத்தி உண்டு. சிறு வயதுமுதலே குறிப்பிட்ட இலட்சியத்துடன் வாழ்க்கையை நடத்துவார்கள்.மற்றவர்களை ஏமாற்றத் தெரியாது.
14 ஆம் தேதி பிறந்தவர்கள்
இவர்கள் மிகுந்த அதிர்ஷ்டம் உடையவர்கள். பயணத்தில் சலிக்காதநாட்டம் இவர்களுக்கு இருக்கும். பலர் புகழ்பெற்ற வியாபாரிகளாகஇருப்பார்கள். இருந்தாலும் இவர்களது வாழ்க்கையில் அடிக்கடிவிபத்துகள், சரிவுகள் ஏற்படும். இறைவனின் அருளால் இவர்களுக்குதுன்பங்களைச் சமாளிப்பதற்கான சூழ்நிலையும், அறிவும் உருவாகும்.காதல் விஷயங்களில் கவனமாக இல்லாவிட்டால், பின்புவாழ்க்கையே கசந்துவிடும். மக்களைக் கவர்கின்ற சிறந்த எண் இது.எனவே எப்போதும் இவரைச் சூழ்ந்து 10 பேர் இருப்பார்கள்.அரசியலிலும் இவர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டு!
23 ஆம் தேதி பிறந்தவர்கள்
இவர்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலிகள். குருச்சந்திர யோகம்நிறைந்தவர்கள். அரசாங்கத்தாரால் எப்போதும் ஆதரவு கிடைக்கும்.சமூகத்தில் உயர்ந்த பதவிகள் கிடைக்கும். ஓர் அரசனைப் போன்றுஅனைத்து வசதிகளுடனும் வாழ்வார்கள். பண்பாடும், ஒழுக்கமும்நிறைந்தவர்கள். இவர்கள் உலகத்தில் சாதனை புரியப் பிறந்தவர்கள்.மக்களைக் கவர்கின்ற சக்தி நிறைந்தவர்கள். புன்னகை புரிந்தேமற்றவர்களை வென்று விடுவார்கள். இவர்கள் சொல்லும்வார்த்தைகளுக்கு மறுப்பு இருக்காது. அனைத்து மக்களின் அன்பும்,ஆதரவும் கிடைப்பதால் பெரும் வியாபாரிகளாகவும் ஆன்மிகம் மற்றும்அரசியல் துறைகளில் புகழ் பெற்றதும் விளங்குவார்கள்.
எண் 5-க்கான (புதன்) தொழில்கள்
இவர்கள் கதை, கவிதை, நாடகம் எழுதல், சிற்பம் செதுக்குதல்,ஜோதிடம் பார்த்தல், காகிதம், மொச்சை, பயிறு, மஞ்சள், முத்து,வெற்றிலைப் பாக்கு கொடி வகைகள் போன்ற வியாபாரங்கள்/தொழில்கள் நன்மை பயக்கும். கல்வித் துறை, கணக்குத் துறை, தபால்துறை போன்றவற்றில் பணி செய்தல், Accountants,சொற்பொழிவாற்றுதல், புரோகிதம் செய்தல் போன்றவையும் ஒத்துவரும். ஜோதிடம் போன்ற சாஸ்திர ஆராய்ச்சியிலும் ஈடுபடுவார்கள்.சிலர் நாட்டின் தூதுவர்களாகவும் இருப்பார்கள்.
பொதுவாக அனைத்து வியாபாரங்களும் இவர்களுக்கு நன்மை தரும்.ஆனால் பொருட்கள், கருவிகள் உற்பத்தித் துறைகளில்இறங்கக்கூடாது! Marketing மற்றும் Broker போன்ற தொழில்கள்நன்மை தரும். சொந்தத் தொழில் செய்யவே இவர்கள் விரும்புவார்கள்.இவர்கள் மற்றவர்களிடம் வேலை செய்யும்போது, முதலாளிகளுக்குபல ஆலோசனைகளையும், பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளையும்கூறுவார்கள். அதனால் முதலாளிகளால் மிக விரும்பப்படுவார்கள்.பொதுவாக தனியார் நிறுவனங்களில் வேலை செய்வார்கள்! அடிக்கடிதொழிலை மாற்றும் இயல்பினர். சம்பள உயர்வே இவர்களதுநோக்கம்! ஏதாவது உபதொழில். செய்து வருமானத்தை பெருக்குவதில்நாட்டமாக இருப்பார்கள். விற்பனைப் பிரதிநிதிகள் போன்றவற்றிலும்நன்கு பிரகாசிப்பார்கள்.
அறிவியல் துறைப் பணிகள், கலைத்துறை, பேச்சாளர்கள் போன்றதுறைகளும் நன்கு அமையும். இவர்கள் அறிவினால் உழைப்பவர்கள்!மற்றவர்களை வசியம் செய்து தங்களின் காரியங்களை சாதித்துக்கொள்வார்கள். நடிகர்கள், நடிகைகள், எழுத்தாளர்கள், வியாபாரிகள்இந்த எண்ணில் பிறந்திருப்பார்கள். Business Management கணிதம்,செய்தி சேகரிப்பாளர்களாகவும் வெற்றி பெறுவார்கள்.
நவக்கிரக மந்திரங்கள் – புதன்
புதன் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் புதன் தசை அல்லது புதன்அந்தர் தசையின் போது: புதனின் கடவுளான விஷ்ணுவைத் தினமும்வழிபட வேண்டும்.
தினசரி விஷ்ணு ஸ்தோதிரம் படிக்க வேண்டும்.
புத மூல மந்திர ஜபம்:
“ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் புதாய நமஹ”,
40 நாட்களில் 17000 முறை சொல்ல வேண்டும்.
புதன் ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.
ப்ரிங்கு கலிகா ச்யாம்
ருபேணா ப்ரதிமம் புதம்!
ஸௌம்யம் ஸௌம்ய குணோபேதம்
தம் புதம் ப்ரணமாம் யஹம்!!
தமிழில்,
இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புத பகவானே பொன்னடி போற்றி!
பதந்தந் தாள்வாய் பண்ணொலியானே
உதவியே யருளும் உத்தமா போற்றி!!
தொண்டு: புதனன்று நன்கொடையாக
உளுத்தம் பருப்பு பச்சை பாருப்பு கொடுக்கவேண்டும்.
நோன்பு நாள்: புதன்.
பூஜை: ஸகஸ்ரநாம விஷ்ணு பூஜை.
ருத்ராட்சம்: 10 முக ருத்ராட்சம் அணியவேண்டும்.
புத காயத்ரி மந்திரம்
கஜத்வஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி|
தந்நோ புத: ப்ரசோதயாத்||
புதன் தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் சுந்தர
காண்டத்தின், 35 வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும்.
சங்கீத முமூர்த்திகளில் ஓருவரும், வேத விற்பன்னருமான
ஸ்ரீ மான் முத்துசாமி தக்ஷிதர் அருளியது.
புத பகவான் கீர்தனைகளை நாட்டக் குறிஞ்சி ராகத்திலும்
புத பகவான் கீர்த்தனம் – பல்லவி
புதம் ஆக்ரயாமி ஸதகம் ஸூரவிநுதம் சந்த்ர தாராஸூதம் (புதம்)
அனு பல்லவி
புதஜனைர் போதிகம் பூஸூரைர் மோதிதம் மதுர கவிதா
ப்ரதம் மஹநீய ஸம்பதம் (புதம்)
சரணம்
குங்கும ஸமத்யுதிம் குருகுஹ முதரக்ருதிம் குஜவைரிணம்
மணி மகுட ஹார கேயுர கங்கணாதி தரணம்
கமனீயதர மிதுன கன்யாதிபம் புஸ்தக கரம் நபும்ஸகம்
கிங்கர ஜன மஹிதம் கில்பிஷாதி ரஹிதம்
சங்கர பக்தஹிதம் ஸதாநந்த ஸஹிதம் (புதம்)
பிறந்தவரும், வேத விற்பன்னர்களால் அறியப்பட்டவரும், அழகியகவிதா சாமர்த்யத்தை அளிப்பவரும், நிறைந்த ஐஸ்வர்யத்தைஅருள்பவரும், குங்குமம் போன்ற காந்தி உள்ளவரும்,
குரு குஹனுக்கு சந்தோஷம் தருபவரும், அங்காரகனுக்குபகையானவரும், ரத்னாபராணங்களை அணிந்தவரும், கன்னி, மிதுனராசிகளுக்கு அதிபதியும், கையில் புத்தகம் வைத்திருப்பவரும்,நபும்ஸகர், தாஸரால் கொண்டாடப்படுபவரும், பாவங்களைஅகற்றுபவரும், சிவ பக்தருக்கு நமை அளிப்பவரும், எபொழுதும்ஆனந்தமாய் இருப்பவருமான புத பகவானை துதிப்போம்.
புதன் பகவானுக்கு உரியவையும், பிரீத்தியானவையும்
ராசி மிதுனம், கன்னி திக்கு வடகிழக்கு
அதி தேவதை விஷ்ணு ப்ரத்யதி தேவதை நாராயணன்
தலம் திருவெண்காடு வாகனம் குதிரை
நிறம் வெளிர்பச்சை உலோகம் பித்தளை
தானியம் பச்சைப் பயிறு மலர் வெண்காந்தள்
வஸ்திரம் பச்சை நிறம் ரத்தினம் மரகதம்
நைவேத்யம் பாசி பருப்பு பொடிஅன்னம் சமித்து நாயுருவி
மன நோய், சீதள நோய், வெண் குஷ்டம், ஆண்மைக் குறைவு, ரத்தசோகை, புற்று நோய், நரம்பு தளர்ச்சி ஆகியன புதன் பகவானால்ஏற்படக் கூடிய நோய்கள். இத் தலத்தில் அகோர மூர்த்தி காட்சிதருகிறார். ஈசானம், தத்புருஷம், வாம தேவம், ஸத்யோஜாதம்,அகோரம் என்ற சிவனின் ஐந்து முகங்களில் அகோரத்திற்கு உரியவர்இவர். ஞாயிற்று கிழமைகளில் இவருக்கு சிறப்பு வழிபாடுசெய்யப்படுகிறது.
அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப இவரை வெவ்வேறுகோலத்தில் வழிபட வேண்டும். மோட்சம் கிட்ட வெண்மை நிறத்திலும், காரிய சித்தி கிட்ட சிவப்பு நிறத்திலும், சத்ரு நாசத்திற்குகரு நிறத்திலும் இந்த அகோர முர்த்தியை வணங்க வேண்டும். “சிவஞான போதம் ” என்ற நூலை தமிழுக்கு தந்த ” மெய்க்கண்டதேவரின் ” தந்தையும், தாயும் தங்களது ஜாதகப்படி பிள்ளைப் பேறுஇல்லை
என்று அறிந்தும், இத் தலம் வந்து, மூன்று தீர்த்தங்களிலும் நீராடி,திருவெண்காட்டு இறைவனை தொழுது பிள்ளைப் பேறு பெற்றனர்.இது பிள்ளைப் பேறு அளிக்கும் திருத்தலம். காசிக்கு நிகரானதிருவெண்காடு
திரு ஞான சம்பந்தர் இத் தலம் வந்தபோது மணல் யாவும் சிவலிங்கமாகவும், ஊரே சிவ லோகமாகவும் காட்சியளிக்க கண்டு, “அம்மா ” என அம்பாளை விளிக்க, அம்மனும் , சம்பந்தரை தன்இடுப்பில் ஏந்தி இறைவனிடம் சேர்த்தாராம். இதனால் அம்மன் “பிள்ளை இடுக்கி அம்மன் ” ஆனார். திருநாவுக்கரசர், சுண்டரர்,மாணிக்கவாசகர் என சமயக் குரவர் நால்வரும் இத் தலத்தின் மீதுபதிகங்கள் பாடியுள்ளனர். மூர்த்தி, தீர்த்தங்களை போன்றுவிருட்சங்களும் இங்கு, வடவால, கொன்றை, வில்வம் என மூன்று.
வெவ்வேறு கோலத்தில் வழிபாடுகள்
மன நோய், சீதள நோய், வெண் குஷ்டம், ஆண்மைக் குறைவு, ரத்தசோகை, புற்று நோய், நரம்பு தளர்ச்சி ஆகியன புதன் பகவானால்ஏற்படக் கூடிய நோய்கள். இத் தலத்தில் அகோர மூர்த்தி காட்சிதருகிறார். ஈசானம், தத்புருஷம், வாம தேவம், ஸத்யோஜாதம்,அகோரம் என்ற சிவனின் ஐந்து முகங்களில் அகோரத்திற்கு உரியவர்இவர். ஞாயிற்று கிழமைகளில் இவருக்கு சிறப்பு வழிபாடுசெய்யப்படுகிறது. அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப இவரை வெவ்வேறுகோலத்தில் வழிபட வேண்டும். மோட்சம் கிட்ட வெண்மைநிறத்திலும், காரிய சித்தி கிட்ட சிவப்பு நிறத்திலும், சத்ரு நாசத்திற்குகரு நிறத்திலும் இந்த அகோர முர்த்தியை வணங்க வேண்டும்.
பிள்ளைப் பேறு அருளும் பரிகாரத் தலம்
” சிவஞான போதம் ” என்ற நூலை தமிழுக்கு தந்த ” மெய்க்கண்டதேவரின் ” தந்தையும், தாயும் தங்களது ஜாதகப்படி பிள்ளைப் பேறுஇல்லை என்று அறிந்தும், இத் தலம் வந்து, மூன்று தீர்த்தங்களிலும்நீராடி, திருவெண்காட்டு இறைவனை தொழுது பிள்ளைப் பேறுபெற்றனர். இது பிள்ளைப் பேறு அளிக்கும் திருத்தலம்.
சிறப்பான சில குறிப்புகள்
எண் :- 5
எண்ணுக்குறிய கிரஹம் :- புதன்
அதிர்ஷ்ட தேதிகள் :- 5,14,23,9,18,27
அதிர்ஷ்ட கிழமை :- புதன், சனி, ஞாயிறு
அதிர்ஷ்ட மாதங்கள் :- ஜனவரி, மே, ஜுன்
அதிர்ஷ்ட ரத்தினங்கள் :- மரகதப்பச்சை, ஜிர்கான்
அதிஷ்ட திசை :- வடக்கு
அதிர்ஷ்ட நிறம் :- பச்சை, சாம்பல்நிறம்
அதிர்ஷ்ட தெய்வங்கள் :- மஹாவிஷ்ணு, சரஸ்வதி,அர்த்தநாரீஸ்வரர்
அதிர்ஷ்ட மலர்கள் :- வெண்காந்தள், துளசி
அதிர்ஷ்ட தூப, தீபம் :- கற்பூரம். பச்சை கற்பூரம்
அதிர்ஷ்ட சின்னங்கள் :- குதிரை, குபேர சின்னம், வலம்புரிசங்கு,சக்கரம். பசுமையானவை
அதிர்ஷ்ட மூலிகைகள் :- துளசி, அற்றஇலைஒட்டி
அதிர்ஷ்ட யந்திரங்கள் :- சுதர்ஸனர், மஹாலட்சுமி
அதிர்ஷ்ட எண் :- 5
அதிர்ஷ்ட உலோகம் :- வெள்ளி, பிளாட்டினம்
ஆகாத எண் மற்றும் கூட்டுத்தொகை :- 8
ஆகாத தேதிகள் :- 8, 17, 26
ஆகாத நிறம் :- கருப்பு
http://www.newlanka.lk/3965

No comments:

Post a Comment