வெங்காயம் உடல் ஆரோக்கியத்திற்கு பயன்படுவதோடு மட்டுமல்லாமல், அழகுக்கும் பயன்படுகிறது.
பெண்களுக்கு முக்கியமான கூந்தல் உதிர்விலிருந்து பாதுகாக்கிறது.
வெங்காயத்தில் உள்ள சல்பரானது தலை முடி உதிர்வால் ஏற்படும் வழுக்கைத் தலையில் முடி வளர உதவுகிறது.
எவ்வாறு பயன்படுத்தலாம்?
1. வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை ஸ்கால்ப்பில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும். இந்த சிகிச்சையை வாரம் 2 முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
2. 1 டேபிள் ஸ்பூன் வெங்காய சாற்றினை 1 லிட்டர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து முடித்த பின், இறுதியில் அந்த கலவையைக் கொண்டு தலைமுடியை அலச வேண்டும்.
இப்படி தலைக்கு குளிக்கும் போது செய்து வந்தால், முடியின் வளர்ச்சி அதிகரிக்கும். குறிப்பு: இந்த முறையை பின்பற்றினால் அடுத்த முறை தலைக்கு ஷாம்பு போடும் வரை தலையில் வெங்காயத்தின் வாசனை இருக்கும்.
3. 1 டேபிள் ஸ்பூன் வெங்காய சாற்றினை 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் கலந்து, அந்த எண்ணெயை தலையில் ஸ்கால்ப்பில் படும்படி தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் ஷாம்பு போட்டு அலச வேண்டும். இந்த முறையை வாரம் ஒருமுறை மட்டும் தான் பின்பற்ற வேண்டும்.
4. ஒரு சிறு வெங்காயத்தை அரைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 1 கப் பீர் சேர்த்து கலந்து, தலையில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு தலையை அலச வேண்டும். இந்த மாஸ்க்கையும் வாரம் ஒருமுறை தான் மேற்கொள்ள வேண்டும்.
5. வெங்காய சாற்றினை வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வர, ஒரே மாதத்தில் முடி உதிர்வதை முற்றிலும் தடுக்கலாம்.
6. வெங்காய சாற்றினை எலுமிச்சை சாற்றுடன் சேர்த்து கலந்து, தலையை மசாஜ் செய்து வந்தால், தலைமுடி உதிர்வது தடுக்கப்படுவதோடு, பொடுகுத் தொல்லையும் நீங்கி, ஸ்கால்ப் சுத்தமாகும்.
7. வெங்காயத்தை அரைத்து, அத்துடன் சிறிது தயிர் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி 45 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச, முடி உதிர்வது தடுக்கப்பட்டு, தலைமுடியின் மென்மைத்தன்மையும் பாதுகாக்கப்படும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக